உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280


தாள் ஈஸ்"; அவனது உதடுகளில் அப்போதும் புன் முறுவல் இழைந்திருந்தது. இத்தனே வருஷங்களாக அவன் தன்னிடம் எவ்வளவு உண்மையுடன் நடந்து வந்தான் என்பதையும், சைனவிலிருந்து தங்களை அழைத்து வருவதற்கு எத்தகைய பயங்கர மான ஆபத்தில் அவன் துணிந்து இறங்கியுள்ளான் என்பதையும் எண்ணியபோது அவள் உள்ளம் நெகிழ்ந்தது. அவன்மீதுள்ள அன்பு எல்லையற்றுப் பெருகியது. இப்போது குவிந்துள்ள அவனது நீல விழிகளில் நாளை காலையில் மீண்டும் பிரகாசமும் குறும்பும் நிரம்பிவிடும். அவள் குனிந்து அவனுக்கு மென்மை மிகுந்த முத்தம் ஒன்றை அளித்தாள். அருகாமையில் இடைவிடாமல் கேட்டுக்கொண் டிருந்த சிள்வண்டுகளின் இனிய ரீங்கார ஒலியி னுள்டே அவளும் நித்திரை வசப்பட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/280&oldid=1274986" இலிருந்து மீள்விக்கப்பட்டது