பக்கம்:இலட்சிய பூமி.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 12 மறுநாள் காலையில் குழுவினரைப் பத்திரமாக அங்கேயே இருக்கச் செய்துவிட்டு, ஃபான் புறப் பட்டான்; கொஞ்சம் உணவு கொண்டுவருவதற்காக ஸ்வாட்டையும் தன்னுடன் அழைத்துச் சென்ருன். அந்தக் குழுவினர் தாங்கள் இருந்த இடத்திலிருந்து ஐம்பதடிக்குக் கீழே பாதை நெடுகிலும் யாராவது வருகிருர்களா என்பதைப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும்; தேவைப்பட்டால், பிறர் பார்வை யிலிருந்து அவர்கள் சுலபமாகத் தப்பி காட்டிற்குள் நுழைந்துவிட முடியும். ஃபானும் ஸ்வாட்டும் திரும்பியபோது எல் லோரும் எழுந்து விட்டார்கள். அவர்கள் ஒரு பொட்டணம் சூடான பன் ரொட்டிகளும் வெங் காயம் தாளித்த பன்றி இறைச்சியும் ஒரு பெரிய பாண்டம் நிரம்பத் தேநீரும் கொணர்ந்தார்கள்; பாண்டத்துக்கு அவர்கள் உத்தரவாதப் பணம் கட்டவேண்டியிருந்தது. - - காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு, எல்லோரும் கல கலப்பாக காணப்பட்டார்கள்; அன்றையப் பொழு தும் மந்தாரமின்றி தெளிவாக இருந்தது முக்கிய மான காரணமாகும். அவர்கள் ஃபானைப் பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/281&oldid=752856" இலிருந்து மீள்விக்கப்பட்டது