பக்கம்:இலட்சிய பூமி.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283 தொடர்ந்தனர். அவர்களுக்கு அடி மட்டத்தில் அகன்றதொரு நீர்ப்படுகை இருந்தது; அப்பால், சுமார் ஐந்துமைல் தூரத்திற்கு தெற்கிலும் தென் கிழக்கிலும் மலைத் தொடரே காணப்பட்டது. அவர் களுக்கு வலது பக்கத்தில் தொலைவில் சுற்றிலும் தாவரங்களால் சூழப்பட்ட லுங்காங் அமைந் திருந்தது. பல முக்கியமான சாலைகளும் உபநதி களும் அதை நோக்கிக் குறுகிச் சென்றன; அதற் கப்பால், கான்டன்-கெளலுான் இருப்புப் பாதை சென்றது; ஆனல் அது பார்வைக்குத் தென்பட 6ઈ6 ટકા). அவர்களுக்குக் கீழே, காலைக் கதிரொளியில் லுங்காங் நீர்த்தேக்கம் பிரகாசித்துக் கொண் டிருந்தது. லுங்காங்கை விட்டு நேராகப் புறப்பட்ட ஒர் ஆறு பள்ளத்தாக்கில் பாய்ந்து அவர்களுக்கு முன்புறம் கிழக்கு நோக்கிச் சென்றது. "அதோ, மலைகள் இருக்கின்றன. தென்கிழக்கில் மலையடிவாரத்தில் உள்ள சிறுநகரம்தான் பிங்ஷான்” என்று விளக்கின்ை ஃபான். மேகக் கூட்டம் ஒன்று போல நட்மலைச் சிகரங் களை அவர்களின் பார்வையிலிருந்து மறைத்தது. ”இனி நடை கொஞ்சம் கடினமானதாகவே இருக்கப் போகிறது” என்று குறிப்பிட்டான் ஃபான். அவன் மனம் சரியாக இல்லை. அவன் தொடர்பு கொள்ள விரும்பிய அந்த ஆள் வீட்டில் இல்லை. அவர்களின் வருகை பற்றி அந்த ஆளுக்கு அறிவிக்க அவனுக்கு நேரமில்லாமல் போய்விட்டது. இன்னும் ஒன்றிரண்டு நாட்களுக்கு அவன் திரும்பமாட்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/282&oldid=752857" இலிருந்து மீள்விக்கப்பட்டது