பக்கம்:இலட்சிய பூமி.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283


னென்று அவன் மனைவி ஃபானிடம் சொன்னுள். ஆண்கள், பெண்கள், பையன், அயல் நாட்டவன் ஒருவன் ஆகியோர் அடங்கிய இந்தக் கூட்டத்தினர் எங்ங்னம் வயல்களை இரவு நேரத்தில் கடக்கமுடியும்? கிராமங்கள், ஓர் ஆறு, நெடுஞ்சாலை ஆகியவற்றைக் கடந்தாக வேண்டும். பிங்ஷான் இங்கிருந்து பத்து அல்லது பன்னிரண்டு மைல் தூரமாவது இருக்கும். அங்கே கிராமத்து நாய்கள் இருக்கும்; அல்லது ராணுவ வீரர்கள் இருப்பார்கள். ஆகவே நகரங் களையும் முக்கியமான சாலைகளையும் அவர்கள் ஒதுக்கி விட வேண்டியிருந்தது. தங்கள் வருகையைப் பொறுட்படுத்தாத வகையில், பிறர் கவனத்தி லிருந்து அவர்கள் எவ்விதம் தப்ப முடியும்: பையனின் செருப்புக்களை ஃபான் கூர்ந்து நோக்கினன்; திருப்தியற்ற பெருமூச்சு விட்டான். “அவனுக்கு ஒரு ஜதை செருப்புகள் வேண்டும். இனி போகும் வழி கரடுமுரடாக இருக்கும்” என்ருன் ஃபான். கிராமத்துக்குச் சென்று செருப்பு வாங்குவ தாகக் கூறினுள் ஈஸு. - 'நீ போக வேண்டாம். அவனை ஸ்வாட் அழைத்துப் போகட்டும். அவர்களை அவ்வளவு கவன மாக யாரும் பார்க்க மாட்டார்கள். அவளுக்குப் பாதை தெரியும். சுமார் ஒரு மைல்தான் இருக்கும். தோலாலான குறடுகள் கொண்ட செருப்பு கிடைப் பது துர்லபம். நன்ருகத் தாங்கி உழைக்கக்கூடிய வலுவாக தைக்கப்பட்ட அடிப்பட்டைகள் கொண்ட செருப்புக்களை வாங்க வேண்டும். ஸ்வாட், உங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/283&oldid=1274987" இலிருந்து மீள்விக்கப்பட்டது