உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285

யினுல் மீண்டும் அவள் மூக்கை உறிஞ்சிக் கொண் டிருந்தாள்.

'டேய் சின்ன கண்ணு! உன் வயதில் எனக் கொரு கண்ணுன மகன் இருந்தானடா! அந்தச் செருப்பு ஜோடியை நான் கையிலெடுத்தபொழுது.... அட கடவுளே! நான் என்ன பாவம் செய்தேன்?" அவள் மீண்டும் பலமாக அழுது கொண்டிருந்தாள். சாலையின் நடுவில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்மணியின் துயரம் சிறு கும்பலைக் கூட்டியது. போலீஸ்காரன் ஒருவன் கால்களை நீட்டிவைத்து நடந்து வந்து, நிதானத்துடன், 'என்ன நேர்ந்தது?” என்று கேட்டான், - 'ஒன்றுமில்லை,” என்ருள் அவள். 'எங்கிருந்து வருகிருய்?” 'போக்லோவிலிருந்து." 'அப்படியா?........ எங்கே போய்க் கொண்டிருக் கிருய்? என்ன நடந்தது?" - 'போக்லோவில் என் குடும்பம் முழுவதையும் இழந்துவிட்டேன். பிங்ஷானிலுள்ள என் உறவி னர்களைப் பார்ப்பதற்குப் போய்க் கொண்டிருக் கிறேன். நான் நல்லபடியாகவே இருக்கிறேன், ஐயா." காவல் படையினன் அலட்சியத்துடன் தோள் களைக் குலுக்கிக்கொண்டு போய்விட்டான். கூடி நின்று அனுதாபத்தோடு வேடிக்கை பார்த்த சிறு கும்பல் அவர்களுக்கு வழி விட்டது. "போக்லோவில் எத்தகைய பயங்கரம் நடந் திருக்கிறது: சென்ற இரு தினங்களிலே பல அகதிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/285&oldid=1274989" இலிருந்து மீள்விக்கப்பட்டது