உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28? அசாய் கீழே குதித்து சமாளித்துக் கொண்டு தன் தோழனை நோக்கி ஓடிவந்தான். மகிழ்ச்சியால் அவர்கள் இருவரும் ஆரத்தழுவிக் கொண்டனர், 'லெய்வா எங்கே’’’ 'இருக்கிருள், நான் காண்பிக்கிறேன் வா. நீ எப்படித் தப்பித்தாய்?” “எப்படியோ தப்பிவிட்டேன், இல்லையா?” பஸ் நிற்கப் போகிறதென்று நினைத்து, ஸ்வாட் முன்னமேயே அதை நோக்கி ஓடிவிட்டாள். “ஸ்வாட் ஸ்வாட்!” என்று ஸ்ப்ரெளட் அவளைக் கூப்பிட்டான். ஆனால், அ. வ ன் அழைத்தது அவளுக்குக் கேட்கவில்லை. "சரி; நாம் அவள் வரும் வரை காத்திருப்போம்” என்ருன் சிறுவன். 'உன்னுடன் இருந்த அந்த அம்மாள் யார்?’ "ஸ்வாட். அவளும் எங்களோடு வந்து கொண் டிருக்கிருள். இதோ பார், இந்தப் புதிய செருப்புக் களை நான் வாங்கினேன்:” - 'சரி லெய்வா எங்கே?' என்று மீண்டும் அசாய் கேட்டான். . "அதோ மேலே....கொஞ்ச தூரம்தான் இருக் கிறது.” - 'அந்த அம்மாள் எதற்காக பஸ்ஸைத் துரத்திக் கொண்டு ஓடுகிருள்?” - 'போக்லோவைச் சேர்ந்தவர்களை அவள் தேடிக் கொண்டிருக்கிருள்" என்ருன் சிறுவன் ஸ்ப்ரெளட். ஸ்வாட் பஸ்ஸைப் பிடித்துவிட்டாள்; நான்கு அல்லது ஐந்து பிரயாணிகள் இறங்கியதை அவள் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/287&oldid=752862" இலிருந்து மீள்விக்கப்பட்டது