பக்கம்:இலட்சிய பூமி.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288


ஒருவரையும் தெரியவில்லை. முரண்டுபிடித்து அவள் பஸ் ஸி ல் ஏறிக்கொண்டு "சாங்ஃபூ!....சாங்ஃபூ! என்று கத்தினுள். பதில் இல்லை; அங்குள்ள யாரை யும் அவள் அறியவில்லை. அவளே பலவந்தமாக இறக்கி விட்டு லுங்காங் நோக்கி பஸ் தன் பிரயாணத்தைத் தொடர்ந்தது. மன ஆறுதலின்றி கால்கள் தள்ளாட ஸ்வாட் பாலத்தை நோக்கி மெள்ளத் திரும்பினள். பையன் களோடு சேர்ந்தபொழுது லேசாக மூச்சுத் திணறி யது. 'நாம் போகலாமா?” என்ருன் அசாய். 'நீங்கள் முன்னுல் செல்லுங்கள்” என்று பதில் சொன்னுள் ஸ்வாட். "குட்டி ஸ்ப்ரெளட் உனக்குப் பாதை தெரியும். நான் உனக்குப் பின்னல் வருகிறேன்.” என்ருள். சிறுவன் ஸ்ப்ரெளட்டின்வருகைக்காக டுவானும் ஈஸாவும் கவனமாக வழிபார்த்துக்கொண்டிருந் தார்கள். அப்போது இரு சிறுவர்கள் துரத்தில் ஒடி வருவதை அவர்கள் கண்டுகொண்டனர். சந்தேகமே இல்லை, அவர்களில் ஒருவன் ஸ்ப்ரெளட் மற் றவன் அசாய்தான். பையன்கள் வழி முழுவதும் சிரித்துக் கொண்டும் தா விக்கொண்டும்.ஒன்று சேர்ந்து கூச்சல் போட்டுக்கொண்டும் வந்தனர். நல்ல வேளையாக, அக்கம் பக்கத்தில் யாருமில்லை. ஸ்ப்ரெளட் பத்திரமாக திரும்பி வந்ததைக் கண்டு டுவானும் ஈஸுவும் மகிழ்ச்சியடைந்தனர். அசாய் எவ்வாறு அங்கே வந்திருந்தான்? அவனுக்கு எப்படித் தெரிந்தது? ஸ்வாட் எங்கே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/288&oldid=1274991" இலிருந்து மீள்விக்கப்பட்டது