உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289


அவள் ஏன் அவர்களுடன் வரவில்லை? முந்தின இரவில் அசாய் எங்கே இருந்தான்? என்பன போன்ற கேள்வியும் பதிலும் எல்லோரையும் திணர அடித்தன. நான் சீக்கிரமாகப் புறப்பட்டுவிட்டால் உங்களை நிச்சயம் கண்டுபிடித்துவிட முடியுமென்று எண்ணி இருந்தேன். நீங்கள் எல்லோரும் எங்கே போயிருக் கிறிர்கள் என்றுடெங்பிங் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் எனக்கு ஒன்றும் தெரியாது, என்று சொல்லிவிட்டேன் என்ற விவரங்களை அவன் லெய்வாவிடம் சொன்னன். ஃபானின் முகத்தில் கவலை சூழ்ந்தது; 'டெங்பிங் எங்கே இருக்கிருர்?' என்ருன். 'அவர் எங்களுடன் பஸ்ஸில் வந்தார்.” "அவர் எங்கே போய்க் கொண்டிருக்கிருர்?” 'எனக்குத் தெரியாது. பிங்ஷானுக்குப் போய்க் கொண்டிருக்கிருர் என்று நினைக்கிறேன்.” ஃபான் முகத்தைச் சுளித்துக்கொண்டான். "அவர் லெய்வாவைப்பற்றி விசாரித்தது நிச்ச யந்தாளு?" - - "நிச்சயம்தான். அவர் என்னைக் கேட்டார். ஆனல் நான் அவரிடம் சொல்லவில்லை.” ஃபானின் கவலையடைந்த தோற்றத்தைக் கண் டான் ஜேம்ஸ். . . . - “இங்கே வா, இப்படி உட்காரு!” என்று சொல்லி ஒரு பாறையைச் சுட்டினன் ஃபான். "ஆரம்பத்திலிருந்து நடந்ததை அவன்சொல்லட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/289&oldid=1274992" இலிருந்து மீள்விக்கப்பட்டது