உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290


டெங்பிங்கை நீ எப்படிக் கண்டுபிடித்தாய் என்பதை எங்களுக்கு விவரமாகச் சொல், ஊம்!” என்ருன். கேள்வி கேட்பதற்கு வசதியாக பையனுக்கு முன்னுல் சப்பணமிட்டுக் குந்தினன் ஃபான். அசாய் கூற ஆரம்பித்தான்: 'நடுப்பகலுக்குப்பின் கொஞ்ச நேரம் கழித்து நான் சிறையிலிருந்து தப்பி வெளியேறினேன். நீங்கள் வீட்டில் இல்லை. நீங்கள் இரவு பஸ் மூலம் லுங்காங்குக்குப் புறப்படுவதாக லெய்வா என்னிடம் சொன்னுள். பத்தரைமணி பஸ்.... சரிதானே?....நேரம் ஆகவில்லை. வீதிகளைச் சுற்றி அலைந்தேன்.” ஈஸுவின் பக்கம் திரும்பி, 'உங்களில் ஒருவர்கூட வீட்டில் இல்லை' என்ருன் அவன். "நாங்கள் பிற்பகலில் அந்நேரம் படகில் இருந் தோம்,' என்று விளக்கினுள் ஈஸ்". "அவனே தொடருட்டும்” என்று ஃபான் இடை மறித்தான். - 'நல்லது; நீங்கள் அங்கே போயிருந்தீர்களோ என்று மதப்பிரச்சாரசபை இல்லத்தை எட்டிப் பார்க்க எண்ணினேன். அங்கும் யாரும் இல்லை." 'மிஷன் இல்லத்துக்கு நீ எப்போது போனுய்?” எள்று ஜேம்ஸ் கேட்டான்; - "சுமார் நாலறைக்கு!” 'உள்ளே சென்ருயா?" "ஆம்; கதவு திறந்திருந்தது; சுற்றிப் பார்க்க உள்ளே சென்றேன்." . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/290&oldid=1274993" இலிருந்து மீள்விக்கப்பட்டது