உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

k93 என்னைத் தங்கும்படி தூண்டினர். தன் போக்கை அவர் மாற்றிக்கொண்டு நான் சாப்பிட்டுவிட்டேன வென்று அன்புடன் என்னை விசாரித்தார். சாப்பிட்ட தாகச் சொன்னேன் நான். அவர் கொஞ்சம் பணத்தை என் கையில் வைத்தழுத்தினர்; போய் நன்ருகச் சாப்பிடு; நினைவில் வைத்துக்கொள். நீ என்னைப் பார்த்ததாக மட்டும் யாரிடமும் சொல்லக் கூடாது!’ என்ருர். 'நீ அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டாயா?” 'இல்லை. என்னிடம் நிரம்பப் பணம் இருப்ப தாகக் கூறி, நான் வைத்திருந்ததை அவரிடம் காட் டினேன். அவர் கண்கள் அகல விரிந்தன. எங்கி ருந்து உனக்குப் பணம் கிடைத்தது?’ என்று வினவி ஞர். லெய்வா ஜெயிலில் எனக்குக் கொடுத்தாள்' என்றேன் நான். எப்போது?’ என்று துருவினர். இன்று காலையில் என்றேன் நான். என்னிடம் நீ பொய் பேசுகிருய். இன்று நீ அவளைப் பார்க்க வில்லையென்று இப்பொழுதுதான் சொன்னுய். அவ் வளவு பணத்தை அவள் ஏன் உனக்குத் தந்தாள்? என்று மேலும் கிண்டினர். ஒரு சமயம். என்று நான் சொன்னேன். - - ஒரு சமயம் என்ன? அவள் வெளியேறிப் போய் விட்டால் என்பதற்காகத்தானே? என்ருர். இல்லை; அவர்கள் என்ன வடக்கே அனுப்பும் பட்சத்தில் எனக்கு உதவியாகயிருக்கும் என்ற கார ணத்திற்காக!' என்றேன் நான். நான் பொய் பேசு வதாகக் கூறி முன்னும் பின்னும் தப்படி போட்டு நடக்கலானர். 1 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/293&oldid=752869" இலிருந்து மீள்விக்கப்பட்டது