உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294


பிறகு சட்டென்று திரும்பி சரி, அவள் இப் போது எங்கே?' என்று என்னைக் கேட்டார். வாஸ் தவமாகவே அவர் ஏதோ சந்தேகப்பட்டார். அப் போது ஒன்பது அல்லது பத்து மணி இருக்கும். ஆகவே அது சமயம் அவள் தன் வீட்டில் இருந் திருக்க வேண்டியவளே அல்லவா? அவர் சென்று அலமாரியைத் திறந்தபோது உங்கள் கோட் அங்கு காணப்படவில்லை!...”என்று நிறுத்தினன் அசாய். எல்லாவற்றையும் ஆவலோடு கேட்டுக்கொண் டிருந்தாள் லெய்வா. பிறகு என்ன நடந்தது?” என்று விசாரித்தாள். 'நான் வெளியேறிவிட விரும்பினேன். அவர் என்னுடன் இருப்பதை நான் விரும்பவில்லை; ஏனெ னில் நான் உங்களோடு வரவேண்டியவன். ஊரடங் குச் சட்டம் அமலில் இருப்பதால் நான் புறப்படக் கூடாது என்பதாக அவர் தெரிவித்தார். அப்போது நான் அங்கிருந்து வெளியேறி என் அறைக்குத் திரும்பினேன்” என்ருன் அசாய். 'அதுதானே கடைசி இரவு?.... - 'ஆம். உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன்அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றே நான் கருதுகிறேன்! எல்லாவிதத்திலும் அவர் அப். படித்தான் தோன்றினர். அவர் பயங்கரமான முறை யில் மனக்கிளர்ச்சி அடைந்திருந்தார். சதா தனக் குத்தானே பேசிக்கொண்டும், படுக்கையில் புரண்டு கொண்டும் மீண்டும் குதித்தபடி கண்ணுடியில் தன்னைத்தானே மூர்க்கமாக முறைத்துப் பார்த்துக் கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தார். பார்க் $ 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/294&oldid=1274996" இலிருந்து மீள்விக்கப்பட்டது