பக்கம்:இலட்சிய பூமி.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 13 ஆறுமணி ஆவதற்கு இன்னும் நேரம் இருந்தது இருட்டில் ஃபான் சிறுபயணம் போய்த்திரும்பினன்; உடனடியாகப் புறப்படும்படி ஒவ்வொருவருக்கும் உத்தரவிட்டான். தன்னுடைய திட்டங்களை அவன் மாற்றிக்கொண்டிருந்தான்; சமவெளிகளை இரவில் கடந்து அவர்கள் அபாயத்துக்கு உள்ளாகக்கூடா தென்று முடிவு செய்தான். பள்ளத்தாக்கு பிரதேசம் ஜன நெருக்சமுள்ளது. பிங்டிசியை நோக்கிச் சென்ற கப்பிப்பாதையில் அவர்கள் சிரமத்துடன் முன்னேறினர்கள். நெடுஞ்சாலைப் பாலத்திலிருந்து சுமார் முப்பதடி தூரத்தில் ஒதுப்புறமாக அலறிச் செடிகளால் மறைக் கப் பட்டிருந்த படகொன்று தயாராக நின்றுகொண் டிருந்தது. லுங்காங்கைத் தாண்டி சிலிஷியாவுக்கு அவர்களை அழைத்துச் செல்வதற்கு படகுக்காரனேடு ஏற்பாடு செய்திருந்தான் ஃபான்; அங்கிருந்து அவர்கள் குன்றுகளை நோக்கி நடந்து செல்வார்கள், நடு இரவுக்கு முன்பே அவர்கள் போய்ச் சேர்ந்தால் வைகறைக்கு முன்னதாக மலைகளில் ஏறிச்செல்ல நான்கு அல்லது ஜந்து மணி நேரம் கிடைக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/298&oldid=752874" இலிருந்து மீள்விக்கப்பட்டது