உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

299


ஆமை வேட்டைக்கு உபயோகப் படுத்தப்பட்ட படகு அது. படகுக் காரி தன் தலையைச் சுற்றிலும் இறுக்கமான கறுப்புச் சால்வையைத் தரித்திருந் தாள். இளம் பருவமுள்ள மகளோடும் மகளுேடும், வயது முதிர்ந்த கணவைேடும் அவள் வசித்து வந்தாள். வெறுங்காலோடு அவர்கள் எல்லோரும் நடந்தார்கள். தங்களது குட்டையான முழுக்கால் சட்டைகளுக்குக் கீழே தெரியும்படி கெண்டைக்கால் களில் சேறு அப்பிக் கொண்டிருந்தது. இவர்கள் ஆமை கள் பிடிப்பதற்காக பின்புறமிருந்த கால்வாய்களிலும் சிறிய கடல்கழிகளிலும் குட்டைகளிலும் திரிந்து: பிடித்த ஆமைகளைச் சுத்தம் செய்து சந்தையில் விற்ருர்கள். அவர்கள் தங்களது சொந்த பாஷை யையே பேசினர்கள்; ஹாங்காங்கிலுள்ள படகுக் காரர்கள் பேசும் டான்சியா மொழியை ஒத்திருந் தது. வம்ச பரம்பரையாக, வரிவிதிப்பிலிருந்து அவர்கள் விலக்களிக்கப்பட்டிருந்தனர். அரசாங்க ஆதிக்கத்தின் கரங்கள் இன்னமும் அவர்களை தீண்ட வில்லை. தங்கள் பரம்பரை வழக்கப்படி காற்றுகள்: அலைகள் ஆகியவற்றின் தெய்வத்தை-மட்சூ தீவி லுள்ள மட்கு தேவியை அவர்கள் தொழுதார்கள். ஆயினும் ஆமைகளை வேட்டையாடி விற்கும் அருவருப்பான தொழிலை மட்டும் அவர்கள் விட்டு விடவில்லை. உயரமான வெள்ளைக்காரன் மற்றவர்களோடு படகுக்கு வந்தபோது, அங்கிருந்த பதின்ைகு வயது டைய படகோட்டிப் பெண்ணின் கண்கள் அவனை வெறித்துப் பார்த்தன. அவள் வதனம் மஞ்சள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/299&oldid=1274999" இலிருந்து மீள்விக்கப்பட்டது