உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300


கலந்த பழுப்பு நிறமாக இருந்தது. புதிய இளஞ் சிவப்பு நிறப்பூவொன்று அவள் தலையை அலங்கரித் தது. அயல் நாட்டினனுக்குத் தன் புன்னகையைக் காண்பிக்கச் சற்றும் துணியாமல் அவள் தன் வாயை பொத்திக்கொண்டாள். மேல் தளத்தில் ஆமை ஒடுகள் சிதறிக்கிடந்தன, புதிதாக பிடிக்கப்பட்ட ஆமைகள் பெரிய கூடையில் அடைக்கப்பட்டு படகில் கட்டப்பட்டு தண்ணிரில் விடப்பட்டிருந்தன. படகு செல்லும்போது அவை கூடையோடு இழுத்துச் செல்லப்படும். படகின் மையப்பகுதிக்கு மேலே மூங்கில் படல்களின் மீது கித்தான் துணியால் மூடுபோடப்பட்டிருந்தது. அந்தக் குடும்பத்தின் துரங்கும் இடமாக இது பயன் பட்டது. "நாம் எல்லாரும் இதில் எப்படி அடைந்து கொள்ளப் போ கிருேம்?' என்று ஜேம்ஸ் தயக்கத் தோடு கேட்டான். 'நம்மால் முடியுமே!’ என்று பதிலிறுத்தான் ஃபான். படகின் நடுப்பகுதியைச் சுறுசுறுப்பாகச் சுத்தம் செய்து ஈரத் துணியினல் துப்புரவாகத் துடைத்து கொண்டிருந்தார்கள் படகுக் குடும்பத்தினர். 'நாங்கள் சீக்கிரம் தயாராகி விடுவோம்." பிரயாணிகளுக்கு இடவசதிக்காக பிடித்த ஆமைகளில் சிலவற்றை சிற்ருேடையில் வீசியெறிந் தார்கள். ஏனென்ருல் சுலபமாக, ஒர் இரவில் இருபது யுவான் சம்பாதிக்கக்கூடிய வேருெரு சந்தர்ப்பம் அவர்களுக்கு இனிக் கிடைக்காதல்லவா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/300&oldid=1275000" இலிருந்து மீள்விக்கப்பட்டது