பக்கம்:இலட்சிய பூமி.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

801 அவைகள் அங்கேயே கிடக்கட்டும்; நாம் திரும்பி யதும் அவைகளைச் சகதியிலிருந்து தேடிக் கண்டு பிடித்துக்கொள்ளலாம்.” சுத்தம் செய்யும் வேலை முடிந்தது; உட்பகுதியை மூடிவிட்டு, வளைவுப் பகுதியில் பெரிய வலைக்கண் கொண்ட கூடைகளைப் படகோட்டி வைத்தான். அவர்கள் வழியில் லுங்காங்கின் எல்லை ஒரமாகச் செல்லவேண்டும்; நகரத்திலிருந்துவீசும் வெளிச்சம் எதுவானுலும் அது கூடைகளின் மீதுதான் விழும். ஒருவர்பின் ஒருவராக அவர்கள் படகின் பாது காப்பான அடிப்பகுதிக்கு ஊர்ந்து சென்ருர்கள். எல்லோரும் அமர்ந்து பின்புறமிருந்த சுற்றுவட்ட அடைப்பின் மீது அழகாகப் பின்னப்பட்ட மூங்கில் தட்டியொன்றை வைத்து மூடிவிட்டான் பட கோட்டி. - - குழுவினர் ஒருவரோடொருவர் நெருக்கியடித் துக்கொண்டு ஒன்ருய் அமர்ந்தார்கள். முறைப் பிரகாரம் ஒருவர் மாற்றி ஒருவர் கால்களை நீட்டிக் கொள்ளலாமே தவிர, எல்லோரும் கால்களை நீட்டிக் கொண்டு அமர அங்கு போதுமான இடம் கிடை யாது. ஆனல் இடம் கதகதப்பாகவும் இருட்டாக வும் பாதுகாப்பாகவும் இருந்தது. ஃபான் எல்லேர் ருக்கும் பன் ரொட்டிகளை நிறைய விநியோகம் செய் தான்; படகோட்டியின் மகளை அவர்களுக்காகத் தேநீர் தயாரிக்கும்படிச் சொன்னர்கள். - படகோட்டி தன் குடும்பத்தாருடன் பேசிக் கொண்டிருந்தான்; வார்த்தைகள் அவர்களுக்குப் புரியவில்லை; படகு முன்னேக்கித் தள்ளாடியது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/301&oldid=752879" இலிருந்து மீள்விக்கப்பட்டது