உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304


வாங்கிக் கொண்டான். அது வழிகளைக் காட்டும் சிறுவரை படம்; பென்சிலால் வரையப்பட்டிருந்தது. ஹஅவாங்ஹாகெங், பிலிங்சூன், சஞ்சொளடின் போன்ற நிற்குமிடங்கள் மாத்திரம் கொடுக்கப்பட்டு பென்சிலால் குறிக்கப்பட்டிருந்தன; ஆனல் துரங்கள் மட்டும் கிலோமீட்டர்களில் கச்சிதமாகக் குறிக்கப் பட்டிருந்தன. "இவைதாம் மலைகளிலுள்ள காவல் நிலை யங்களா?” - - 'ஆம். இரண்டு பஸ் நிறுத்தத்துக்கு நடுவில் டாகு லிங்கைச் சுற்றிக் கொண்டு நாம் செல்ல வேண்டும். சஞ்சொடினுக்குச் சரியாகக் கீழே ஆயுதம் தாங்கிய ரோந்துப்படையின் எல்லை ஆரம்பமாகின்றது.” 'எல்லையில் அமைக்கப்பட்டுள்ள முள்வ்ேலிக் கம்பிகளை நாம் எப்படிக் கடந்து செல்லப் போகிருேம்?" "என் ஆட்கள் அங்கு தயாராக இருப்பார்கள்." என்று நம்பிக்கையளித்தான் ஃபான். படகு நின்றது; பின் புறத்தில் சலசலப்பு கேட்டது. குப்புறப்படுத்து நகர்ந்து கொண்டே படகின் பின்பக்க முனைக்குச் சென்ருன் ஜேம்ஸ். அப்போது இருண்டிருந்தது. சில விடிைகளுக் கொருமுறை, மேகங்களில் புகுந்து வெளிவந்து கொண்டிருந்தான் சந்திரன். வெண்ணிற ஒளிப் புள்ளிகள் சிற்றலைகளினின்றும் விட்டு விட்டு மங்க லாகப் பிரகாசித்தன. நீரோடையின் மத்தியில் படகோட்டி நங்கூரம் பாய்ச்சியதால், நீரோட்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/304&oldid=1275003" இலிருந்து மீள்விக்கப்பட்டது