பக்கம்:இலட்சிய பூமி.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306


'அவன் வாசிக்கட்டும். அதனுல் நமது பாதுகாப் புக்குப் பங்கம் வந்துவிடாது” தேநீர்ப் பாண்டத்தையும் கோப்பைகளையும் அந்தப் பெண் சுத்தம் செய்து கொண்டிருந்தாள்; தண்ணிர் கொதிப்பதற்காகச் காத்திருந்தாள். அவளது சிறிய, வட்டமான, புன்னகை பூத்த முகத் திற்கு நெருப்பு ஒளியூட்டியது. ஒரு சிறிய மரக்கோயிலுக்கு முன்னுல் மரத் தீப் பந்தங்கள் எரிந்து கொண்டிருந்ததை ஈஸ் கவ னித்தாள். அடிக்கடி வீசும் இளங் காற்றில் ஆற்று நீரில் மங்கிய சிவப்புப் பொறிகள் மின்னின. "அதுதான் மட்சூதேவியின் கோயில்” என்று ஜேம்ஸிடம் சொன்னுள் ஈஸ்". "காற்று அலை ஆகியவற்றின் தெய்வம் அவள்!....எல்லாப் படகோட் டிகளும் அவளே வணங்குகின்றனர்,” என்று மேலும் சொன்னுள். 'படகோட்டி தேநீருக்குக் காத் திருந்தான்!” "எங்களுக்கும் கொஞ்சம் தேநீர் கிடைக்குமா!" என்று கேட்டாள் ஈஸ்". 'உங்களுக்குத் தேவையான உயர்ந்தரக தேயிலை எங்களிடம் இல்லை. நாங்கள் குடிக்கும் தேநீர் காட்ட மாக இருக்கும். ஆனால் நீங்கள் இரவு பூராவும் நடப்பதாக யிருந்தால் இந்த தேநீர் உங்களுக்கு நல்லது!” படகோட்டி சாவகாசமாக அமர்ந்து அமைதி யாக புகைக் குழாயை உறிஞ்சிக்கொண்டிருந்ததை ஜேம்ஸ் கவனித்தான், படகின் பின்புறத்தில் அடைந்து கிடந்த ஆமை வேட்டையாடும் இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/306&oldid=1275005" இலிருந்து மீள்விக்கப்பட்டது