உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

315 வெளிச்சத்தில் துல்லியமாய்த் தெரிந்தன. உயரத் தில் ஆகாயத்திற்கு எல்லை காட்டிய வண்ணம் ஊசி இலை மர வகைகள் நின்றன. சந்திரன் மேற்கு நோக்கிச் சரியத் தொடங்கியது. பின்னல் லெய்வாவுடன் வந்து கொண்டிருந்த ஃபானுக்காக அவர்கள் காத்திருந்தனர். "அது என்ன சத்தம்!” 'மலைகளிலே ஒநாய்களும் காட்டுப் பன்றிகளும் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். சந்திரனை நோக்கி ஒநாய் குரைத்துக் கொண்டிருப்பது மாதிரி அது கேட்கின்றது.” "அதோ பாருங்கள்” என்று கத்தின்ை ஜேம்ஸ். செங்குத்துப் பாறையின் முனையைச் சுட்டிக்காட்டி ன்ை அவன். ஒரு பிரயாணியின் தலையும் கழுத்தும் ஆகாயத்தை நோக்கி நீட்டிக்கொண்டிருக்கும் தெளி வானதொரு நிழலுருவத்தை அவர்கள் கண்டனர். ஃபான் சொன்னன்:“அது ஒரு ஒநாயாக இருக்கும். மனிதர்களின் நடமாட்டத்தின் காரணமாக அது பீதியடைந்திருக் கலாம். மோப்பத்தால் உணரும் அறிவு அவற்றுக்கு மிக அதிகமாக உண்டு என்பார்கள்!” “மலைகளில் வேட்டைக்காரர்கள் இருக்கிருர் களா?' என்று கேட்டான் ஜேம்ஸ். "எனக்குத் தெரியாது. காட்டுப் பன்றிகளைப் பிடிப்பதற்கு சில சமயங்களில் குடியானவர்கள் வலை விரிக்கிரு.ர்கள். முக்கியமாக இங்கே டாசிலிங்கைச் சுற்றிலும்தான் அப்படி, கோலநட்டில் அவ்வளவு அதிகமில்லை!” - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/313&oldid=752892" இலிருந்து மீள்விக்கப்பட்டது