பக்கம்:இலட்சிய பூமி.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312


"என்னைப்போல் என்ருல் நீ மனத்தில் கருதுவது என்ன?” என்று ஜேம்ஸ் இளநகையுடன் பதில் சொன்னன். 'உங்களைப்போல் என்ருல், உயரமாகவும் நீல நிறக் கண்களோடும் துப்பாக்கியைச் சுமந்துகொண் டும் இருப்பார்கள் என்று கருதுகிறேன்.” 'நாங்கள் எப்போதும் துப்பாக்கிகளைத் துரக்கிச் செல்வதில்லை. ஆங்கில சினிமா படங்களைப் பார்த்து விட்டு உனக்கு இம்மாதிரி தோன்றுகிறது. வீட்டில் நாங்கள் துப்பாக்கிகளைச் சுமக்கமாட்டோம். துப் பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிச் சீட்டு பெற வேண்டும்.” “உங்களைப் போலத்தானே அவர்களிடமும் மணம் வீசும்?” அவன் பேச்சை நிறுத்த முயன்ருள் ஈஸ்ா. அப்போது தூரத்திலிருந்து ஓநாயின் ஊளைச் சத்தம் கேட்டது. பையன் காலோடு தலை நடுங்கிக் கொண்டிருந்ததை ஈஸ்- உணர்ந்தாள். பிறகு சிறிது நேரம் ஒரே அமைதி; மீண்டும் சில விடிைகள் கழித்து அந்தப் பயங்கரமான புதிய ஒலி மீண்டும் கேட்டது. அது அவர்களுக்கு மேலே எங்கோ ஒர் இடத்திலிருந்து கேட்டது. எங்கிருந்து வருகிற தென்று எளிதில் புரிந்துகொள்ள முடியாதபடி சத்தம் வந்து கொண்டிருந்தது. - அவர்கள் மேலே பார்த்தார்கள். நேர் எதிரே ஐம்பது கஜம் தள்ளி செங்குத்தாகப் பாறை ஒன்று இருந்தது. அதன் சிவந்த பழுப்பு நிற விளிம்புகளில் இருண்ட துவாரங்கள் இருந்தன; அவை நிலவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/312&oldid=1275011" இலிருந்து மீள்விக்கப்பட்டது