பக்கம்:இலட்சிய பூமி.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

311


அசாயோடு முன்னுல் நடந்து கொண்டிருந்த ஸ்வாட் மூட்டைகளைச் சுமந்தாள். அவர்கள் ஒரு சிறிய வாய்க்காலைப் பின் தொடர்ந்தார்கள்; பின் னர், கூர்மையாக மேலே சென்ற அடிச்சுவட்டுப் பாதையைக் கண்டு பிடித்தார்கள். பாதை சரிவாக வும் பிடிப்பில்லாமலும் இருந்ததால் தொத்தித் தொத்தி ஏறிச் செல்லுவதில் பயணம் தாமதமாக வும் சிரமமாகவும் இருந்தது. மேலே சென்று அவர் கள் வளைவில் திரும்பியபோது, தூரத்திலிருந்த நீர் வீழ்ச்சியின் சத்தத்தைக் கேட்டனர். பிறகு பாதை சமதரையாக கொஞ்ச தூரம் வரை இருந்தது; ஈஸுவும் அவள் தந்தையும் சில விடிைகள் ஒய்வு பெற்றனர்; அசாயும் ஸ்வாட்டும் முன்னல் நிதானமாக முன்னேறிச் சென்று கொண் டிருந்ததை அவர்கள் கவனித்தார்கள். தன் உயிரைக் காப்பாற்ற அசாய் உதவியதை ஸ்வாட் தெரிந்து கொண்டாள். -- சிறுவன் ஸ்ப்ரெளட் உருவில் சிறியவகை இருந் தாலும், மற்றவர்களுடன் சமாளித்து நடந்து வந்தான். 'நாம் சுதந்திர நகரத்துக்குத் தானே போய்க் கொண்டிருக்கிருேம்?' என்று அவன் ஈஸாவைக் கேட்டான். "ஆமாம்; அங்கேதான்.” "உங்களைப் போலவே அங்கே நிறைய ஆங்கி லேயர்கள் இருக்கிருர்களா?' என்று ஜேம்விடம் கேட்க அவன் பின்பக்கம் திரும்பினன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/311&oldid=1275010" இலிருந்து மீள்விக்கப்பட்டது