உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310


தாழ்ந்த குன்றை வளைத்துக்கொண்டு கிழக்கில் சென்றபோது பாதை சுலபமாக அமைந்திருந்தது. தேய்ந்த தடத்தை அடைவதற்கு அவர்களுக்கு இரண்டு மணி நேரத்துக்குக் கூடுதலாக ஆயிற்று. கோஷ்டியினர் பிரிந்து இளைப்பாற தரையில் அமர்ந் தனர். ஜேம்ஸ் தன் கைக் கடியாரத்தைக் கவனித் தான். மணி இரண்டே முக்கால். அவர்களுக்கு இடது பக்கத்தில் மலையினின்றும் சரிந்த சிற்றருவியின் சலசலப்பொலி இரவில் இனி மையாக இருந்தது. மற்றப்படி தாழ்.குரலில் பேசி ல்ைகூட இருபதடிக்கு அப்பால் கேட்கும் அளவுக்கு அவ்விடம் அமைதியாக இருந்தது. 'அது இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும்?” என்று ஃபானேக் கேட்டான் டூவான். அவனுக்கு மூச்சுத் திணறியது. 'உண்மையாக அதிகத் துரமில்லை. கிட்டத் தட்ட ஒரு மைல் இருக்கும். ஆனல் பாதை நெடுகி லும் செங்குத்தாக இருக்கிறது. நமக்கு ஒரு மணி நேரம் பிடிக்கலாம்.' "நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிருேமென் பது உங்களுக்குத் தெரியுமல்லவா?” 'ஹாலிவாங்ஷாகெங்கில் எனக்கொரு நண்பர் இருக்கிருர் எங்கள் ஆட்களிலே அவரும் ஒருவர். அங்கு போய்விட்டால் நமக்கு பாதுகாப்பாக இருக்கும்;” - - பாறைப் பாதையில் வயதான டுவானுக்கு ஜேம்ஸ் உதவ வேண்டி இருந்தது. சிறுவன் ஸ்ப்ரெளட்டைக் கவனித்துக் கொண்டாள் ஈஸ்",

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/310&oldid=1275009" இலிருந்து மீள்விக்கப்பட்டது