உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

327


கிரு.ர்கள். அதில்-போக்லோவைச் சேர்ந்தவர்கள் சிலர் இருப்பதாகவும், எல்லையைக் கடப்பதற்காக அவர்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கலா மென்றும் தோன்றுகிறது. நமது வழிகாட்டி திரும் பியதும், உடனடியாக நாம் குறுக்கு வழியாக பாய்ந்து சென்று விடவேண்டும். மற்றவர்களிட மிருந்து விலகி இருங்கள். பெரிய கும்பல் சேர்ந்தால் அதன் விளைவு, ரோந்துப் படைகளோடு சண்டை சச்சரவு செய்து கொள்வதில்தான் முடியும். நாம் ஏற்கனவே ஒரு பெரிய குழுவாக யிருக்கிருேம். ரோந்துப் படைகளை எதிர்ப்படாமல், நாம் சந்தடி யின்றித் தப்பிவிட வேண்டும்!”.... இவ்வாறு ஃபான் திட்டத்தை விளக்கினன். அருகில் ஸ்வாட் நின்றிருந்தாள்; பேசவில்லை. போக்லோ அகதிகளைக் குறித்துத் தான் கேள்விப் பட்டதை ஃபான் விவரித்தபோது, தன் கணவனைத் தேடிப்பார்க்க வேண்டுமென்றும் கடைசிப் பட்சமாக போக்லோவில் உள்ளவர்களோடு பேசவேண்டு மென்றும் அவள் தெரிவித்தாள். அசாயுடன் ஸ்வாட் கீழே செல்ல ஃபான் சம்மதித்தான். - அசாயை நோக்கி, ‘அங்கே ஜனங்கள் அடித்துப் போடவிரும்பிய கமிஷனர்யார்?அவர் போக்லோவை சேர்ந்த யுவான, அல்லது நமது தோழர் டெங்பிங்கா என்பதை நீ கண்டுபிடிக்க வேண்டும். இது என் விருப்பம்; உன் கண்கள் விழிப்புடன் இருக்கட்டும்; உன் வாய் மூடியிருக்கட்டும். இதோ பார்,” என்று சொல்லி அவனிடம் கொஞ்சம் சீன நாணய நோட் டுக்களைக் கொடுத்தான் ஃபான். "நீ வாங்குகிறவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/327&oldid=1275017" இலிருந்து மீள்விக்கப்பட்டது