பக்கம்:இலட்சிய பூமி.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 29 சிறுவர்கள் ஒருவர் பின் ஒருவராக க்யூ நின்று கொண்டிருந்தனர். வாருங்கள் ; நாம் உள்ளே போவோம்,' என்ருன் அசாய்: "ஆஸ்வாட், வாருங்கள். உங்க ளையும்தான் அழைக்கிறேன்” என்று தொடர்ந்தான். ஸ்வாட்டின் முகம் வெறிச்சென்று இருந்தது: விவரிக்க இயலாத ஒரு குழப்பம் அவள் பார்வையில் தவழ்ந்தது. 'நான் வரவில்லை. நீங்கள் போங்கள். என் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது இருந்தால் தேடிக் கண்டுபிடிக்கிறேன் நான்." 'பிறகு வழி தவறிவிடாதீர்கள்; இதே இடத்தில் எங்களுக்காகக் காத்திருங்கள். நான்குமணி அளவில் நாங்கள் வெளியே வந்துவிடுவோம். இரண்டு கட்டிடத் தொகுதிகளுக்கு அப்பால் இருந்த பஸ் நிலையத்துக்கு ஸ்வாட் சென்ருள்; பஸ்ஸிலிருந்து இறங்கிய பிரயாணிகளைக் கவன மாகப் பார்த்தாள்; பிறகு, அவள் திரும்பி வந்து: கடுகடுத்த முகத்தோடு ஒரு தேநீர்க் கடையில் உட் கார்ந்தாள்; அங்கே பேசுவதை ஒட்டுக் கேட்க அவள் முயன்ருள். நான்கு மணிகழிந்து சற்றைக்கெல்லாம், திரைப் படக் கொட்டகையிலிருந்து ஜனக் கூட்டம் நெரித்துக் கொண்டு வெளி வந்துகொண்டிருந்ததை அவள் பார்த்தாள். பொறுமையாய்க் காத்திருந் தாள்; சிறுவர்களின் கும்பலோடு அசாய் பேசிக் கொண்டிருந்தான். தேவையானவைகளை வாங்கிக் கொண்டு அவர்கள் திரும்பப் புறப்பட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/329&oldid=752909" இலிருந்து மீள்விக்கப்பட்டது