உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 'உங்கள் ஊர்க்காரர்கள் யாரையாகிலும் கண்டு பிடித்தீர்களா?” என்று அசாய் விசாரித்தான். சில் பேர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன், ஆல்ை ஒருவரும் என் புருஷனைப் பார்க்கவில்லையாம்! அவர்களிலே என்னை அறிந்த ஒருவன் 'போக்லோவி விருந்து வந்த சிலர் தங்கள் உறவினர் இல்லங்களிலே ஒளிந்து சொண்டிருப்பதாக கூறினன். தனக்கு சாங்ஃபூவைத் தெரியுமென்றும் சொன் ஞன். அவன் சந்திக்க நேர்ந்தால், என்னைப்பற்றிக் கூறும்படி சொன்னேன். அவர் உயிருடன் இருந்தால், எப்படி யும் என்னிடம் வந்து விடுவார்.” அவள் பேசியபோது, அவள் கண்சளில் சண்ணிர் தளும்பியது. அவநம்பிக்கை, கிலேசம் ஆகிய உணர்ச்சிகளுக்கு அவள் இடம் கொடுத்துப் பழக்கம் இல்லை; இருப்பினும் அவள் முகம் கலங்கி எதையும் புரிந்து கொள்ள இயலாதபடி வெறிச்சோடிக் கிடந்தது. அவர்கள் வேட்டைக்காரனின் வீ ட் ைட அடைந்த சமயம், மணி ஏழு ஆகிவிட்டது. ஃபான் வெளியே நின்றபடி அவர்கள் திரும்பி வருவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அரிசி தோசை காட்டுப் பேரிக்காய், காய்கறிகள் ஆகியவை நிறைந்த கூடையைச் சுமந்தவாறு கின் ஷான் பின்னல் வந்து கொண்டிருந்தான். அசாயின் முகத்தில் புன்முறுவல் பூத்திருந்தது. அவன் ஒரு கோழிக் குஞ்சை அலக்காகத் துாக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான். அதன் பாதங்கள் கயிற்றினுல் கட்டப்பட்டிருந்தன. குன்றின் அடிவாரத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/330&oldid=752911" இலிருந்து மீள்விக்கப்பட்டது