பக்கம்:இலட்சிய பூமி.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

381 இருந்த ஒர் உழவனே சரிக்கட்டி அக் கோழி குஞ்சை தங்களுக்கு விற்கும்படி செய்து எடுத்துவந்தான். "யாராவது உன்னைக் கவனித்தார்களா?” 'அவ்வாறு எனக்குத் தோன்றவில்லை.” 'சரி விஷயத்தைக் கண்டு பிடித்தாயா?” "ஆமாம், அது டெங்பிங்தான்!” 'உனக்கு எப்படித் தெரிந்தது?” "இளைஞர் பலருடன் நான் பேசினேன். இதைக் கேளுங்கள்! சினிமாக் கொட்டகைக்கு நேர்முன்னல் தான் மேற்படி சம்பவம் நடந்ததாம்; அவர் உள்ளே நுழையும்போது யாரோ ஒருவன் அவரை இன்ன ரென அடையாளம் புரிந்து கொண்டான், அவர் வெளியே வந்ததும், போக்லோவைச் சார்ந்த ஏழெட்டுப் பேர்கள் ஒன்றுகூடித் தாக்கி அவரை நடுத்தெருவுக்கு, இழுத்து வந்தார்கள், அவரை அவர்கள் அடித்து உதைத்துக் கொண்டிருந்தார்கள். அவரை அக்கக்காகக் கிழித்து விடுவார்கள் போலத் தோன்றியது. அவர் சோர்ந்து தரையில் விழுந்து விட்டார்; அவர் மூக்குக் கண்ணுடியும் தொலைந்தது. போலீஸ் வந்து சண்டையைத் தடுத்தது; அவர் தன்னுடைய பல் ஒன்றை இழந்ததாக ஒரு பையன் சொன்னன். காவல் படையினர் ஜனங்களை அப்பால் தள்ளியபோது, நடை பாதையில் கொஞ்சம் ரத்தம் சிந்தி இருந்ததை கண்டாளும் அவன்!.... "அப்புறம்?” “காவல்படைக் காரியாலயத்துக்கு இரண்டு மூன்று பேரை அழைத்துச் சென்ருர்களாம். அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/331&oldid=752912" இலிருந்து மீள்விக்கப்பட்டது