பக்கம்:இலட்சிய பூமி.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332


களைக் கைது செய்யும் தருணத்தில், டெங்பிங் எங்கோ மறைந்து விட்டாராம்!” "அவர் இன்னரென்று அவர்களுக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டான் ஃபான். "சம்பவத்துக்குப் பிற்பாடு, ஜனங்கள் பேசிக் கொண்டார்களாம்! வெய்ச்சோ வாராவதியில் நடந்த சம்பவம்பற்றி இறந்த கிழவியையும் மாண்ட ஒரு சிறுவனையும் ஆற்றில் காலால் உதைத்துத் தள்ளியதைப் பற்றி என்னிடம் அந்தப் பையன் விசா ரித்தான்; அது உண்மைதானவென்று என்னிடம் கேட்டான் அவன். போக்லோவில் நடந்த விசாரணை யில் வயதான பாட்டி ஒருத்தியை டெங்பிங் அரை நிர்வாணமாக்கி, உயிர்போகும் வரையில் வெய்யிலில் அவளை முழந்தாளிடச் செய்ததைப் பற்றியும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தனர்!” என்ருன் அசாய்' எதிர்பாராத வகையில் கிடைத்த கோழி விருந்து எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உண்டு முடிந்ததும் அவர்கள் பின்புறம் சென்று படுத்துக்கொண்டார்கள். மரங்கொத்தி அண்டங் காக்கை ஏனையப்பறவைகளின் கலரவம் அடங்கி இரவின் அமைதி இனிமையாக இருந்தது. லெய்வாவும் ஈஸ்-வும் பகலில் சிறு துரக்கம் போட்டு விட்டார்கள். டுவானும் அவன் பேரனும் உள்ளே உறங்கிக் கொண்டிருந்தார்கள். துணைவீட்டை அவர்கள் ஒரளவு சுத்தம் செய்தார்கள்; படுப்பதற்கு இடம் உண்டாக்குவதற்காக த ைர யி ன் ஒரு பகுதியைக் காலி செய்தார்கள். ஜேம்ஸும் ஈஸுவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/332&oldid=1275019" இலிருந்து மீள்விக்கப்பட்டது