பக்கம்:இலட்சிய பூமி.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 15 அடுத்த நாள் காலையில் குழுவினர் படுக்கையை விட்டு எழுந்து வீட்டின் முன்புறம் சென்றபோது சைசாம் மஞ்சத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந் தான். காலை ஐந்து மணிக்குத்தான் தன் கணவன் திரும்பினன் என்றும், சூடாகச் சாப்பிட்டபின்பு, இழந்த துரக்கத்தைச் சரிக்கட்ட உறங்கிக்கொண் டிருப்பதாகவும் அவள் மனைவி சொன்னுள். ஆகவே அவர்கள் அவனைத் தொந்தரவு செய்யவிரும்ப வில்லை, அவர்கள் மறுபடியும் புறப்படும் சமயம் கிட்டத் தட்ட மணி இரண்டாகிவிட்டது. சைசாமுக்கு இது ஒரு நீண்ட பயணமாகத் தோன்றியது; குறைந்தது ஒரு வாரத்திற்குள் திரும்பமுடியுமென அவன் எதிர் பார்க்கவில்லை. கண்ணி வைத்து பிரயாணிகளைப் பிடிப்பவர்கள் வழக்கமாக அணியும் உடைகளை வழிகாட்டி சைசாம் அணிந்திருந்தான். மிகப் பெரிய மூங்கில் தொப்பி ஒன்று அவன் முதுகின் குறுக்கே கயிற்றில் தொங் கியது. பழுப்பு நிறத் தென்னை நாரினல் அரை அங்குல கனத்திற்குத் தைக்கப்பட்ட மேற்சட்டை, நீர்புக முடியாத நீளமான உடுப்பு அவனது தோள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/334&oldid=752915" இலிருந்து மீள்விக்கப்பட்டது