பக்கம்:இலட்சிய பூமி.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

885 களை அகலமாகத் தோன்றச் செய்தன. காட்டி னுாடே பாதைகளை வெட்டுவதற்கு பயன்படும் அரிவாள் ஒன்று அவன் இடுப்பு வாரில் செருகப்பட் டிருந்தது. அவன் ஐந்தடி பத்து அங்குல உயரம் இருந்தான். வலிவுமிக்க அவனது கெண்டைக்கால் தசைகள் வெண்ணிறப் பட்டுத் துணியால் குறுக்கு வசமாக இறுக்கிக் கட்டப்பட்டிருந்தன; வைக்கோ லால் ஆன காலணிகளை அவன் அணிந்திருந்தான். இடுப்பு வாரின் பின்புறத்தில் செம்படவனின் கூடையை ஒத்திருந்த நேர்த்தியாகப் பின்னப்பட்ட சதுரவடிவமான பெட்டி ஒன்றைச் சுமந்திருந்தான் அவன். இவ்வாறு எல்லா சீதோஷ்ண நிலைகளுக்கும் பொருத்தமாக அவன் உடை அணிந்திருந்தான். "நாம் பிலிங்சூனுக்குப் போய்ச்சேர இரண்டு அல்லது மூன்று மணி நேர நடை இருக்கும்; தென் பகுதியில் மறைந்திருக்கும் தேய்ந்த தடத்தில் நாம் நடந்து செல்லலாம். வடக்கேயுள்ள பாதையில் போவது சுலபமாக இருந்தபோதிலும், அங்கே ஜன நடமாட்டம் அதிகமாக இருக்கும். கடைசிவரை பாதை பெரும்பகுதியும் சமதளமாகவே இருக்கிறது. அப்படியே சென்ருல் நாம் டாகூலிங்கின் மறுபக்கத் திற்கு போய்ச் சேர்ந்து விடுவோம்.' டாகூலிங் சிகரத்திற்குத் தென்புறமாகச் சென்ற பாதையில் அவர்கள் நடந்து சென்ருர்கள். ஏற்றங்களும் இறக்கங்களும் மிகுந்திருந்தன; ஆனல் தேய்ந்த களிமண் வழியாதலால் பாதங்களுக்குச் சுளுவாக இருந்தது. அவர்கள் பெரும்பகுதி ஒற்றை வரிசையில் நடந்து சென்ருர்கள், சைசாம் அந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/335&oldid=752916" இலிருந்து மீள்விக்கப்பட்டது