உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

337


சைசாம் தன் போக்கில் எல்லோரையும் பின் னுக்குத் தள்ளிக்கொண்டு வந்து, பாதையை அடைத்தவண்ணம் நின்ருன் கடுங்கோபம் அடைந்த வகைத் தோன்றினன் அவன். பரிதாபத்துக்குரிய அம்மனிதனைக் கூர்ந்து பார்த்தவண்ணம் லெய்வா பயத்தால் ஃபானைப் பற்றிக்கொண்டாள். அவன் தலைமுடி அலங்கோலமாகக் கலைந்திருந்தது. கண்கள் ரத்தச் சிவப்பாகக் காணப்பட்டன. அவனுடைய கறுப்பு நிற சுங்ஷான் கோட்டில் அக்குளுக்கு அடியில் இருந்த ஒரு கிழிசல் மூலம் உள்ளே இருந்த அவனது வெள்ளைச் சட்டை தெரிந்தது. - 'யார் நீ?" என்று அதிகாரம் செலுத்துகிற தொனியில் வினவினன் சைசாம். அந்தப் பைத்தியக்காரன் நின்ருன்; துவண்டு தரையில் சாய்ந்தான்; அவன் கண்கள் உள்ளுக்கு சொருகின; அவன் உடம்பு வலியால் நெளிந்து துடித்துக்கொண்டே இருந்தது. - 'என்னைப்பிடி லெய்வா....எனக்கு கைகொடு!” என்று அவன் கதறினன். அவர்கள் அறிந்திருந்த அந்தப் பழைய டெங்பிங் அல்ல அது! ஆனால் அவன் அதே ஆள்தான்!. லெய்வா திகைத்து மெளனமாளுள். முன்னல் அடியெடுத்துவைத்தவாறு 'அவருடன் நான் பேசுகிறேன்' என்ருன் ஃபான். "எழுந்திருங்கள்” என்று சுருக்கமாகவும் ஆத்தி ரத்துடனும் கூறினன் ஃபான். - அவன் பாதங்களை நோக்கி டெங்பிங் மெதுவாக கஷ்டப்பட்டு நகர்ந்து சென்ருன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/337&oldid=1275020" இலிருந்து மீள்விக்கப்பட்டது