உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338


'நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டான் ஃபான். அப்போது அசாய் வந்து சேர்ந்தான். டெங்பிங் ஒருவர் மாற்றி ஒருவராகப் பார்த்தான். அவன் முகம் குழம்பிப்போய்க் காணப்பட்டது. 'அசாய், நீ வந்துகொண்டிருந்ததாக நான் அறிந்தேன். என்னிடம் ஏன் நீ சொல்லவில்லை? ஏன் நானும் உன்னேடு வருவதை நீ விரும்பவில்லை?" என்ருன் அவன். - இவன் செல்வாக்கோடு அதிகாரத்தில் இருந்த காலத்தில் மிகுந்த அகம்பாவமும் ஆத்திரமும் கொண்டு தன்னை படுநாசமாக்கினன். பகிரங்க விசாரணைகளில் தன்னை அவமானப்படுத்தினன். ஆகவே இந்த மனிதன் பேரில் ஃபானுக்கு வெறுப்பும் கோபமும்தான் உண்டாயிற்று. டெங்பிங்கை அடித் துத் தள்ளி ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முந்தி, தான் முகத்தில் அறைபட்டமாதிரி இப்போது அவன் முகத்தில் அறையவேண்டும் என்று அவன் விரும்பி ன்ை. ஆனல் லெய்வா அவனத் தடுத்துவிட்டாள். டெங்பிங் கைகுவித்து 'தயவு செய், லெய்வா. நாம் நண்பர்கள் அல்லவா?” என்று செஞ்சினன். "இவரும் உங்களில் ஒருவரா? நீங்கள் அவரையும் அழைத்துச்செல்ல விரும்புகிறீர்களா? ஞாபகம் இருக் கட்டும்; நமக்கு இந்தத் தொல்லை ஏதும் வேண்டாம்” என்ருன் சைசாம். 'அது எல்லோரும் தீர்மானிக்க வேண்டிய விஷயம்" என்று கூறி அவன் பால் குளிர்ந்த புன்ன கையை வீசினுள் லெய்வா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/338&oldid=1275021" இலிருந்து மீள்விக்கப்பட்டது