உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

339


சில தப்படிகள் தாண்டியதும் ஒரு வெட்டவெளி இருந்தது. அங்கே, வழிகாட்டியைப் பின்பற்றி, அவர்கள் தாங்களாகவே நின்றுவிட்டார்கள். - 'நீங்கள் முடிவு செய்யுங்கள். இது விடுமுறை உல்லாசப் பயணமன்று. நீங்கள் எல்லோரும் சம்ம தித்தாலன்றி அதிகமான ஆட்களை நான் அழைத்துச் செல்லமாட்டேன்.” டெங்பிங் தானகவே சிறிதளவு சமாளித்துக் கொண்டான். பிறகு புன்னகை செய்தான். 'ஷெக்டின் லெய்வா! நாம் பல வருஷங்களாக நண்பர்களல்லா? நான் முன்பு உங்களுக்கு உதவி செய்திருக்கிறேன். இப்போது நான் சங்கடத்தில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறேன். என்னையும் உங்களு டன் அழைத்து செல்லும்படி கெஞ்சிக் கேட்கிறேன்.” ஃபான் பெரிதும் குழப்பம் அடைந்தான். டெங்பிங் எப்போதும் அவர்கள் வழியில் குறுக்கிடு வான்; அவன் என்ன செய்வானே? கடவுளுக்குத் தான் தெரியும்!-எல்லைப்புற ரோந்துப் படையின ரிடம் அவர்களைக் காட்டிக் கொடுத்துவிடவும் அவ ல்ை முடியும்! டெங்பிங்கிடம் என்ன இருக்கிறதென்று ஆராய்ந் தான் ஜேம்ஸ்; ஆனால் அவனிடம் ஒன்றும் இல்லை. பிறகு சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு "எல்லோரும் கீழே அமர்ந்து சற்று ஒய்வு எடுத்துக்கொள்ள லாமே?” - அப்பொழுதுதான் முதன் முறையாக ஜேம்ஸ் துப்பாக்கியை வெளியில் எடுத்து அதை எல்லோரும் பார்க்கும்படி புல்தரைமீது வைத்தான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/339&oldid=1275022" இலிருந்து மீள்விக்கப்பட்டது