உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$41 விசாரணை செய்த அந்தக் கமிஷனர் இப்போது உணர்ச்சியற்று தெம்பு இழந்து ஒடுங்கிக்கிடந்தான். அவனது தோள்கள் தொய்ந்தன; அவர்களை நேராக உற்று நோக்கக்கூட அவளுல் முடியவில்லை. இறுதியில், டெங் மெதுவாகப் பேசினன். தன் மனத்தை திடப்படுத்திக் கொண்டான். அவனுடைய முகபாவம் மீண்டும் உயிர் பெற்றது. பிறகு லெய்வா வையும் ஃபானையும் கள்ளப்பார்வை பார்த்தான், 'நான் இங்கே இருப்பதற்கான காரணம் என்ன என்பது உங்கள் எல்லோருக்கும் நன்கு தெரிந்திருக் கும். பாலத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய நான் உத்தரவு பிறப்பிக்கவில்லை. இருப்பினும், அதுதான் பிற்பகலில் கலகத்தை உண்டாக்கிவிட் டது. இதுபற்றி அறிவிக்க லென்கே கான்டனுக்குப் போயிருக்கிருர், உண்மையில் ஒவ்வொருவரும் என் னைத்தான் குற்றஞ்சாட்டுவார்கள். தீப்பிடித்து எரிந்ததையும் உணவுப்பொருள் கிட்டங்கி கொள்ளை யடிக்கப்பட்டதையும் நான் பார்த்தபோது, இதற் குரிய தண்டனையை நான் அனுபவித்தே தீரவேண்டு மென்பதை உணர்ந்துகொண்டேன். மஞ்சூரியா அல்லது டர்க்கிஸ்டானில் பணியையும் குளிரையும் எதிர்த்துப் போராடுவதைவிட, தெற்கே செல்வதே சிறந்ததென்று நான் தேர்ந்தேன் என்ருன். பிறகு இறைஞ்சும் பார்வையுடன் அவன் லெய்வாவின் பக்கம் திரும்பி 'ஒவ்வொரு மனிதனும் உயிர் வாழவே ஆசைப்படுகிருன். சரிதானே?” என்ருன். லெய்வா அவனைப் பொருட்படுத்தவில்லை. தங் கள் இட்டங்கள் அனைத்தும் டெங்பிங்கினல் ஆபுத் 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/341&oldid=752923" இலிருந்து மீள்விக்கப்பட்டது