பக்கம்:இலட்சிய பூமி.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342


துக்கு இலக்காகிவிட்டனவென்று ஃபானைப்போன்றே அவளும் கவலைப்பட்டாள். 'உங்கள் கருத்து என்ன?’ என்று ஃபானைக் கேட்டான் ஜேம்ஸ். போன் மூக்கைத் தேய்த்துக்கொண்டே கமிஷ னர்மீது அனல்கக்கும் பார்வை ஒன்றை வீசினன். 'இந்த நாயைத் தூக்கிவிட வேண்டும்” என்று சொன்னன். “அவன் என்னிடமிருந்து முப்பதாயிரம் டாலர்களைக் கொள்ளையடித்தபோது, அதில் தன் சொந்தத்துக்கென்று பத்தாயிரம் டாலர்களை இவன் சுருட்டிக்கொண்டதை நான் மறந்துவிடவே மாட் டேன்........ நீ இடைமறிக்காதே. நான் உன்னைத் தூக்கில் போடமாட்டேன். ஆனல் உன் சகவாசத்தை இங்கு யாரும் வரவேற்கமாட்டார்கள். ஏனென்ருல், நான் உன்னை ஒருபோதும் நம்பமாட்டேன். எங்க ளிடமிருந்து விலகிப்போய்விடு. ஆனல் நீ வேறு ஏதா வது சூழ்ச்சி செய்ய முயற்சி செய்தால்....என் நண்பர் மிஸ்டர் டாய் குறிதவருமல் சுடுவதில் மிகவும் கை தேர்ந்தவர். மறந்துவிடாதே...இனி நீ விரும்பும் இடத்துக்குப் போகலாம்!” என்ருன் அவன். டெங்பிங் கண்கொட்டாமல் மெல்ல எழுந்து நின்ருன்.லேசாக நொண்டி நடந்தான்.லெய்வாவைக் கடைசியாகப் பார்க்கத் திரும்பினன். பிறகு முன்ளுேக்கி வழி நடக்கலானன். 'முதலில் அவன் இங்கிருந்து தப்பிச் செல்லட் டும்” என்ருன் ஃபான். 'அவன் மறுபடியும் நம்மைப் பதுங்கி இருந்து வழிமறிக்கமாட்டானே? என்று கேட்டாள் லெய்வா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/342&oldid=1275024" இலிருந்து மீள்விக்கப்பட்டது