உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34? தான் தனிமையில் மாட்டிக்கொண்டு விட்டதை அவன் உணர்ந்தான். குடியானவன் ஒருவன் அவனது கால்களைக் குறிவைத்து தடியை வீசி அடித்து அவனை நிலைகுலையச் செய்ய முயன்ருன். இவையாவும் வெகு துரிதமாக நடந்துவிட்டன. டெங் மூர்க்கத்தனமாக மேலே இருந்து தேய்ந்த பாதையில் குதித்தான்; விழுந்த வேகத்தில் அவன் அதன் விளிம்புக்கு உருண்டு வந்துவிட்டான். வேறு வழியின்றி அவன் கரங்கள் அதன் முனையை கெட்டி யாகப் பற்றின. - யாரோ அவனுடைய கைவிரல்களை நசுக்கினர் கள். அவன் விழுந்திருந்தால்-அவனுடைய கோட்' சுமார் முப்பதடி கீழே யிருந்த மரக்கிளையில் சிக்காம விருந்தால்-அவன் செங்குத்தாக நூற்றைம்பதடி கீழேயிருந்த பாறையில் விழுந்து அடிபட்டிருப்பான். அந்தப் பயங்கரக் காட்சியைக் காணச் சகிக் காது ஈஸ் பார்வையைத் திருப்பிக்கொண்டாள். இந்த நிலையில் அவன் துடித்து ஊசலாடிக் கொண்டிருந்தான்; அவனுடைய கைகள் பிடிப் பற்றுத் துவண்டன. அவனது கால்கள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தன. உழவர்கள் திகைப்படைந்தார்கள். அவர்களில் ஒருவன் அவன் மீது கல்லை வீச இருந்தான்; ஆனல் மற்றவர்கள் "வேண்டாம்! அவனை விட்டுவிடுங்கள்!” என்று கத்தினர்கள். அக்காட்சியைக் கண்டு ஜேம்ஸ் சிலையானன். இதைவிட கோரமான காட்சியை அவர்கள் கண் டிருக்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/347&oldid=752929" இலிருந்து மீள்விக்கப்பட்டது