உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 j அவன் விருப்பம் அவனுக்குத்தானே தெரியும்! காப்டன் தாயெர் ஒய்வு பெற்ற பிறகு ஸ்ஸெக்ஸில் வீடுவாங்கிக்கொண்டு வசித்தார் அப்போதுதான் ஜேம்ஸின் அன்னை இறந்தாள். அப்போது அவனுக்கு வயசு ஆறு. லண்டனில் கடை வைத்திருந்த பெண் ஒருத்தியை காப்டன் மறுமணம் செய்துகொண்டார், அப்போது ஜேம்ஸ் சிறுவன். எப்போதும் தன்னந் தனியாகவே இருந்து வந்தான். தந்தையால் மகனை முற்றிலும் புரிந்துகொள்ள முடியவில்லை. பையன் படிப்பதில் தீவிர ஆர்வம் கொண்டான். அவன் குடும்பம் கிழக்கிந்திய நாடுகளுடன் எப்போதுமே நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டிகுந்தது. அவனுடைய பாட்டனரான பூஜ்யர் ரோடரிக் தாயெர் அலகாபாத்தில் மதப் பிரசாரகராகப் பணி செய்தார். அப்போது. பிரம்மம்தான் கிறிஸ்தவக் கடவுள் என்றும், கிறிஸ்தவக் கடவுளே பிரம்மம் என்றும் வற்புறுத்திச் சொல்லிவிட்டு அங்கேயே மாண்டு போனர். அவர்களுடைய ஸாஸெக்ஸ் வீட்டில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டிருந்த யானைக் குளம்பிலிருந்து குடை வைப்பதற்குத் தகுந்தபடி அடிப்பீடம் ஒன்று செய்யப்பட்டிருந்தது. இது ஜேம்ஸின் கற்பன சக்தியைத் துாண்டிவிட்டது. சீனவிலிருந்த அத்தை ஆங்கெலிகாவிடமிருந்து வந்த குடும்பக் கடிதங்களை அவனும் வாசித்தான். அவ னுடைய தாத்தாவின் கைப்பட இருந்த சில பழங் கடுதாசிகளைக் கண்டு மயங்கினன். அவனுக்குப் பதினெட்டு வயசு ஆனபோது, இரண்டாம் உலக யுத்தம் முடிந்துவிட்டது. அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/35&oldid=752932" இலிருந்து மீள்விக்கப்பட்டது