உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36

 போது ஆக்ஸ்ஃபோர்டில் இருந்த அவனுடைய சமகால இளைஞரிடையே இருந்த ஆத்திரமும், மனப் போக்கும் அவனிடம் இல்லை. அந்த இளைஞர்களுடன் அவனுக்கு நெருக்கம் ஏற்பட்டதில்லை. மூன்று வருஷங்கள் கழித்து ஆக்ஸ்ஃபோர்டில் இருக்கையில், ஏதோ ஒர் எழுச்சி அவனுள் எழுந்தது. கலை பயில அவன் ஃப்ளாரென்ஸ் சென்றான்; கலையிலேயே மூழ்கினான். ஓராண்டுக்கு மேலாக அங்கே தங்கினான். விடுமுறையையும் அங்கேயே கழித்தான். அப்போது பண்டைய எட்டுரியக் கலையில் நாட்டம் பிறந்தது.

இளைஞன் தாயெரின் வாழ்வு கிழக்கத்திய நாடு களோடு பிணைப்புண்டுவிட்டது. அது தவிர்க்க முடியாகதாகவும் இருந்தது, பீகிங்கில் அவனுடைய கலையார்வத்துக்கு விருந்து கிடைத்தது. அன்ருட வாழ்வின் பொழுதை ஓர் இன்பமாகச் செய்யவல்ல கட்டிடக்கலை, சிற்பம், பாமரமக்களின் வழிமுறைகள் ஆகியவற்றின் மூலம் இங்கு மேன்மையான வாழும் கலையை அவன் கண்டான். நிலவில் ஒளிர்ந்த 'வானுலக ஆலயமும்' சூரியாஸ்தமனத்தின்போது பீகிங்கின் பழங்கால மதங்களின் காம்பீர்யமும் அவனது கலையுள்ளத்துக்கு மகிழ்வு தந்தன. அவனுடைய மன ஆர்வத்திற்கு ஏற்ப கோயில் சந்தைகள் கடை வீதிகள், தெரு ஜனங்கள் போன்ற சூழலி லிருந்து பிரதேசமொழி வேறுபாட்டை எளிதில் கற்றுக்கொண்டான்.

தன்னுடைய சீனத்துக் காதலியான ஈல-வை கள்ளத்தனமாக ரகசியப் பாதை மூலம் கடத்திச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/36&oldid=968094" இலிருந்து மீள்விக்கப்பட்டது