உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350


மரம் மட்டும் தாவி ஏறி வருவதற்கு வசதியாக இருந்தது, அவன் தாவிப் பற்ற முயன்ருன். தூக்கிய அவனது வலது புஜத்தினல் எதையும் எட்டிப் பிடிக்க முடியவில்லை; ஆகவே அவன் மீண்டும் கீழே நழுவி விழுந்தான். ஜேம்ஸ் மெதுவாகத் தன் கைப் துப்பாக்கியை எடுத்துக் குறி வைத்தான். ஒரு ரவை வெடித்தது. டெங்கின் உடல் துவண்டு மரத்தில் தொங்கியது. எல்லோரும் பார்ப்பதற்குத் திரும்பினர்கள். துப் பாக்கிக் குண்டின் அடியில்ை உடல் துடித்தது. ஆனல் தலையும் கைகளும் தொங்கிவிட்டன. அந்த உடல் மரத்தில் அப்போதும் தொங்கிக்கொண்டிருந்தது. அவனுடைய நெற்றிப் பொட்டில் குண்டு பாய்ந்த இடத்திலிருந்து பொங்கிய ரத்தம் அவளது கோட் டையும் கைகளையும் சிவப்பாக்கிக் கொண்டிருந்தது. ஈஸு திரும்பி தன் கரங்களால் முகத்தை மூடிக் கொண்டாள். சாலையிலிருந்த அவர்கள் மீது நிழல் விரித்தவாறு சூரியன் மலைவாயிலில் இறங்கினன். "நாம் அவனுக்குக் கருணை காட்ட இதுவே சிறந்த வழி' என்று ஈஸ்வின் பக்கம் திரும்பி மெது வாகக் கூறினன் ஜேம்ஸ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/350&oldid=1275031" இலிருந்து மீள்விக்கப்பட்டது