உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 16 மலைப் பிராந்திய நிலைகளுக்கு ஏற்ப பிலிங்சூன் சத்திரம் வசதியாக அமைந்திருந்தது. முகட்டினின் றும் தொங்கிய பச்சை நிற முடியுடன் கூடிய பழைய எண்ணெய் விளக்கு ஒன்று நடுவிலிருந்த மேஜைமீது பிரகாசமான ஒளியை பரப்பியது.மூலையில் மற்ருெரு மேஜை இருந்தது. அறை ஈரமின்றி கதகதப்பாக இருந்தது. சமையல் கட்டு பின்புறத்தில் இருந்தது; சிறிது துரத்தில் வெளியே நீண்டிருந்த உயர்ந்த செங்குத்தாக பாறையின் பக்கமாக சன்னலொன்று இருந்தது. வெள்ளையடிக்கப்பட்டிருந்த சுண்ணும்பு மங்கிப்போய் இங்கும் அங்குமாக வெடிப்புக்கண் டிருந்த சுவர்களிலே ஈரடிச் செய்யுள்கள் இரண்டு காணப்பட்டன; அவை சிவப்புத்தாளில் எழுதப் பட்டிருந்தன. நெடுங்காலமாகிவிட்டதால் நிறம் மாறிப்போயிருந்தன; கையெழுத்தும் மோசமாக இருந்தது. இருப்பினும், அது சத்திரத்தின் தொன் மையை உணர்த்தியது. அவை, வழிப்பயணம் செய் வோர்களுக்கான பண்டைய, பிரசித்தமான மூதுரை களைத் தவிர வேருென்றும் இல்லை. . - சேவல் கூவிடச் சென்றிடுவாய்; செங்கதிர் சாயுமுன் சேர்ந்திடுவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/351&oldid=752934" இலிருந்து மீள்விக்கப்பட்டது