உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352


அடுத்த வாசகம்: ஒவ்வொருவனும் அயலான் கூரைப்பனி துடைக்காது; தன்வாசற்பணி துடைக்கட்டும்! சத்திரப் பொறுப்பாளன் ஓர் உல்லாசமனிதன்; எருதுபோன்ற முகம்; ஐம்பது வயதுக்கு மேலிருக்கும் பழையகால தலைக்கவசம் அணிந்திருந்தான். இலாப கரமாகத் தொழில் நடத்துகிருன் என்பதை அவன் முகத் தோற்றம் காட்டியது. தன் விருந்தினர் அனைவரையும் மகிழ்வுடனும் மனப்பூர்வமாகவும் வரவேற்ருன். பிலிங்சூன் என்ருல் செங்குத்தான சுவர்ப்பாறை என்று அர்த்தம். இந்த இடம் வசதிமிக்க முனையில் அமைந்திருந்தது; அங்கே குடியானவர்களும், வேட்டு வர்களும், வழிப் போக்கர்களும் குடிக்கவோ அல்லது ஒரு கோப்பை தேநீர் அருந்தவோ தங்குவார்கள். வடக்கில் செல்லும் குறுகலான ஒற்றையடிப்பாதை ஒன்று அவ்வூரை ஹெங்காங்ஷாவோடு இணைத்தது. ஸஞ்செளடின் நீர்த் தேக்கத்துக்கும் அடியில் உள்ள நெடுஞ்சாலைக்கும் வழிகாட்டியபடி மேற்குப் பகுதி யின் நேர் இறக்கத்தில் அது மையமாக அமைந் திருந்தது. பக்கத்திலே சுண்ணும்புக் காளவாய் ஒன்றும் இருந்தது; இந்தப் பகுதியின் செங்குத்துப் பாறை களில் சுண்ணும்பு கற்கள் மலிந்திருந்தன. செங்குத் துப்பாறைகள் பல அதிசயமான அழகிய உருவ அமைப்புக்களாக அரிக்கப்பட்டிருந்தன; கட்டட வேலைக்கும் உரத்துக்கும் இந்தச் சுண்ணும்பு மிகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/352&oldid=1275032" இலிருந்து மீள்விக்கப்பட்டது