பக்கம்:இலட்சிய பூமி.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

353


சிறந்ததாக கருதப்பட்டதால், பல ஆண்டுகளுக்கு முன் பாவோ-ஆன் அதிகாரவர்க்கத்தினர் இங்கே காளவாய் அமைத்து வேலை செய்யவும் சுண்ணும்பு எரிக்கவும் ஒரு கூட்டத்தினரை அமர்த்தி, காள வா ைய விரிவுபடுத்தியிருந்தனர். இருப்பினும் சென்ற ஆண்டின் காற்று ஊதுலை திட்டத்திலுைம், சில அதிர்ச்சிமிக்க ஏற்பாடுகளுக்கு மனிதசக்தி தேவைப்பட்டதாலும் அதிகாரவர்க்கத்தின் நிர்வாக சம்மந்தமான மாற்றங்களாலும் இந்தக் காளவாய் கைவிடப்பட்டுவிட்டது. அவர்களுக்கு உருளைக்கிழங்குகள் பரிமாறப் பட்டன; அரிசிச்சோறு கிடைக்கவில்லை; ஆனல் வெங்காயம் ஏராளமாக இருந்தது. அந்தக் குழுவினர் நகரத்திலிருந்து வந்திருந்ததையும், அவர்களோடு ஆங்கிலேயன் ஒருவன் சேர்ந்திருந்ததையும் அவர் களால் பணம் கொடுக்க முடியுமென்பதையும் அறிந் தான் மலைவிடுதியின் நிர்வாகி. சுதேசி மதுபானத் துடன் உப்பிடப்பட்ட பன்றி இறைச்சியை அவர் களுக்குப் பரிமாறினன். பன்றி இறைச்சி மொரு மொருப்பாகவும் ருசியாகவும் இருந்தது. பரிசுத்த மான மலைக்காற்றினல் ஏற்பட்ட கடும் பசியை அது நிறைவுடன் தீர்த்தது. அன்றைய களேபரத்தினல் குழுவினர் களைப் படைந்திருந்தனர். - சாப்பாட்டுக்குப்பிறகு நீங்கள் அனைவரும் குதுரகலமாக இருப்பீர்கள்' என்று உபசாரம் கூறினன் அந்த விடுதியின் நிர்வாகி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/353&oldid=1275033" இலிருந்து மீள்விக்கப்பட்டது