உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356


மென்று ஜேம்ஸ் சொல்லிவிட்டான். மற்றவர்கள் சுண்ணும்புக் கிடங்குக்குச் சென்ருர்கள். . அந்த அம்மாள் மேஜைமீது ஒரு பாயையும் அழுக்கடைந்த சிறு மெல்லிய மெத்தையையும் விரிக்கலானள். "பரவாயில்லை, நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் சிரமப்படவேண்டாம்" என்று அவளிடம் ஃபான் சொல்லிவிட்டான். அவளும் சரி என்று சென்று விட்டாள். சத்திர நிர்வாகியும் அவன் மனைவியும் அவர் களுக்கு நல்லிரவு வணக்கம் சொல்லிப் பிரிந்தார்கள். 'இன்று நான் பிடிக்கும் நாலாவது சிகரெட் இது. நமக்கு இது தேவைதான். இல்லையா?"சிகரெட் பெட்டியை ஃபான் பக்கம் நீட்டியபடி, ஜேம்ஸ் சொன்னன். விளக்கொளியில் சுருண்டு செல்லும் வெண்மை யான மெல்லிய புகையைக் கவனித்தபடி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். டெங்பிங்கைப்பற்றி அவர்கள் பேசிக்கொண் டிருந்தார்கள். ஃபான் சொன்னன்: . . 'இன்னமும் எனக்கு அது ஆறவில்லை. நல்ல காரியம் செய்தீர்கள் அந்த நாயைச் கட்டு ஒழித் தீர்கள்.” : "அவன் துன்பத்திற்கும் ஒரு முடிவு கட்டவேண் டாமா?-அதற்காகத்தான்!...உடனடியான நீதி கிடைத்துவிட்டது! இல்லையா?” ஃபான் வெடுவெடுப்பான புன்னகை புரிந்தான். "அது உங்கள் விருப்பம் கம்யூனிஸ்டுகள் செய்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/356&oldid=1275036" இலிருந்து மீள்விக்கப்பட்டது