உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

357


காரியங்களை நாமெல்லாம் எப்பொழுதும் செய்ய இயலாது. சில சமயம் நிதானமாக வழங்கப்படும் நீதி மிகவும் பயங்கரமானதாக இருந்துவிடுகிறது. 1950-ல் அவர்கள் ஒரு பிரபலமான செளமின்டாங் தளபதியைப் பிடித்தார்கள். அவனை அவர்கள் என்ன செய்தார்களென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் அவனைச் சுட்டார்களா? அதுதான் இல்லை!” என்ருன் அவன். 'பின்னே என்ன செய்தார்கள்?” 'மக்கள் எள்ளி நகையாட வேண்டுமென்ப தற்காக முதலில் ஏகாதிபத்தியக் கொள்கை கொண்ட பண்டைய விதுரஷகன் அணியும் தொப் பியை அவனுக்கு அணிவித்து, டாய்ஷான் வீதி களின் வழியாக அணி வகுத்து அவனை அழைத்துச் சென்ருர்கள். பிறகு அவர்கள் அவனைச் சவுக்கால் அடித்து, பிறகு செக்கு நுகத்தடியில் அவன் ஒரு பக்கமும் எருது மற்ருேர் பக்கமுமாகப் பூட்டினர்கள். அவன் சாகும் நிலையை அடையும்வரை, அவன் ஒய்ந்துபோய் மண்ணில் சாயும்வரை அவனை சுற்றிச் சுற்றி எருதுடன் ஒட்டினர்கள். மூச்சு வாங்க அவன் நிற்க விரும்பியபோது, எருது தொடர்ந்துசென்றது; எருதைக் காட்டிலும் அவனத்தான் அவர்கள் அதிக மாகச் சவுக்கால் அடித்தார்கள். எருது அலறியது: அங்கு நடந்து கொண்டிருந்ததை எண்ணி அது ஆச் சரியப்பட்டிருக்க வேண்டும். எருது கண்ணிர் வடித் ததைத் தாங்கள் பார்த்ததாகக் கிராம மக்கள் பலர் சொன்னர்கள். எருதுகள் கூட கண்ணிர் விடுவ துண்டா? பாவம் அந்தப் பேதையின் தோள்கள் 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/357&oldid=1275037" இலிருந்து மீள்விக்கப்பட்டது