பக்கம்:இலட்சிய பூமி.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

865 கியது. ஜன்னல் வெளிச்சத்தில் டுவானின் முகம் வெளுத்து சோர்வடைந்திருந்தது தெரிந்தது; ஆயி னும் அதில் அபூர்வமானதொரு அமைதி தேங்கி நின்றது காணப்பட்டது, கண்களைச் சிமிட்டிக் கொண்டு அவன் ஃபானை நோக்கி சாந்தமாக மெல் லிய புன்னகை செய்தான். 'இப்போது உங்கள் உடல்நிலை எப்படி இருக் கிறது?’ என்று ஃபான் கேட்டான். 'அவ்வளவு சுகமாக இல்லை; ஆனாலும் என் உடல்நலம் சரிப்பட்டுவிடும்” என்று கூறிச் சற்று இருமினன். 'உங்களுக்கு உடல்நலம் ஒத்துவராது என்று தோன்றில்ை, இன்றைய பாட்டுக்கு இங்கேயே தங்கிவிடுவோம்!” நான் வருந்துகிறேன். நாம் இன்னமும் எவ்வ ளவு தூரம் செல்ல வேண்டியிருக்கிறது?” 'இதோ பாருங்கள் நீங்கள் வருத்தப்படாதீர் கள். ஈஸாவும் நானும்-ஏன் நாங்கள் எல்லோருமே உங்களுக்கு வேண்டியதைச் செவ்வனே செய்து கொடுப்போம். உண்மையில் நாம் சுதந்திர நகரத் திற்கு பன்னிரண்டு அல்லது பதினைந்து மைல் தூரத் தில்தான் இருக்கிருேம். சென்ற இரண்டு-மூன்று தினங்களிலே நாம் வெகுதூரம் கடந்திருக்கிருேம் இரண்டொரு நாள் நாம் தங்கிச் செல்வதால் ஒன் றும் முழுகிப்போய்விடாது. நம்முடைய அதிர்ஷ்டம் சரியாக இருந்தால் சனிக்கிழமை இரவு நாம் அங்கே இருக்கலாம்!” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/365&oldid=752949" இலிருந்து மீள்விக்கப்பட்டது