உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

866 சூடான தேநீர் நிரம்பிய பாண்டத்துடன் ஈஸ்" மேலே வந்தாள். அவள் டுவானின் தலையையும் பிறகு அவன் நாடியையும் தொட்டுப் பார்த்தாள். "அப்பா, உங்களுக்கு விரைவில் குணமாகிவிடும்' என்ருள் அவள். 'எங்களிடம் உஷ்ணமானி இல்லை. ஆலுைம் நீங்கள் நல்லபடியாக ஆகிவிடுவீர்களென்று எனக்குத் தெரியும்.” "நான் சற்று ஒய்வு கொள்கிறேன்; நீ ஸ்ப் ரெளட்டைக் கவனித்துக்கொள் எப்போதும் அவ னுடன் யாராவது இருக்கும்படி பார்த்துக்கொள்' பிறகு தன் சிநேகிதன்மீதும், மகள் பேரிலும் கண்ணுேட்டம் பதித்தான் டுவான். 'நேற்றையச் சம்பவம் என்னைச் சிந்திக்கச் செய்தது. வழியில் ஏதாவது நேரிடலாம். ஷெக்டின் ஈஸ்-! இப்போது என்னுடைய ஒரே நம்பிக்கை அந்தப் பையன்தான். ஸ்ப்ரெளட்டை வளர்த்து அவனை நன்கு படிக்க வைப்பதாக நீங்கள் உறுதி கூறுவீர்களா?” "நீங்கள் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கி lர்கள்? நாம் ஹாங்காங்கில் சனிக்கிழமை இரவு அல்லது கடைசிப்பட்சமாக ஞாயிற்றுக்கிழமை இருப்போம்.” - "நான் இப்போதுதான் யோசித்துக் கொண் டிருந்தேன். கடைசி இரண்டு மூன்று நாட்கள்தாம் மிகவும் கடினமானதாக இருக்கும்-அப்பால் எல் லையை அடைந்துவிடலாம்!” "கவலைப்படாதீர்கள். அந்த 'எருமை (வழி காட்டி ஸைசாம்) வழியை அறிவான். இதில் வருத் தப்படுவதற்கு ஒன்றுமில்லை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/366&oldid=752950" இலிருந்து மீள்விக்கப்பட்டது