உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370


செல்ல இயலுமென்று எனக்கு நிச்சயமாகத் தோன்றுகிறது. அதனால் நான்கு அல்லது ஐந்து நபர்களுக்கு வசிப்பிடச் சீட்டுகள் கிடைக்கும். மேற் கொண்டு ஏற்பாடுகள் செய்வதற்கு எனக்கும் சுலப மாக இருக்கும். வழி காட்டிகள் முக்கியமாக செய்ய வேண்டிய காரியம், நாம் பாதையைக் கடந்து செல் கையில் விழிப்புடன் கவனித்துக் கொள்ள வேண்டு மென்பதே!...” 'ஜேம்ஸ் படபடத்தான். என்ன செய்யலாம் என்பதைக் கேட்டறிய விரும்புபவனைப் போல் ஈஸாவையும் ஃபானையும் மாறிமாறிப் பார்த்தான்' "குண்டுகளை வீணுக்கக் கூடாது. இந்த நிலைமை யில் காவல் படையினரை விழிப்படையச்செய்யாமல் தப்பவேண்டும்.” - ஈஸாக்கு முடிவு செய்வது கஷ்டமாக இருந்தது. சிரமமும் அபாயமும் நிறைந்த இப் பயணத்தை மேலும் ஒருநாள் தொடரும்படி தன் தந்தையிடம் கேட்க அவளுக்கு சங்கடமாக இருந்தது. இன்னமும் தெளிவாகச் சொன்னல், ஜேம்ஸின் தஸ்தாவே ஜூகள் சோதிக்கப்படாமலும் போலீஸ் அவனை கேள் விகள் கேட்காமலும் இருந்தால் செளகரியமாக இருக்கும் என்று எண்ணினுள். ஆகவே தன் தந்தையுடன் போவதென்று தீர் மானம் செய்தாள். 'நானும் உங்களோடு வருகிறேன். விரும்பினால் உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறேன். நீங்கள் உங்கள் தந்தையை கவனித்துக் கொள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/370&oldid=1275043" இலிருந்து மீள்விக்கப்பட்டது