உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

373


காவலாளிகள் கரையைச் சுற்றி ஓடினர்கள். பயங் கரமான சண்டை நடந்தது. காவலாளிகள் இருவர் காயமடைந்தனர்; உழவர்களில் பெரும்பாலானேர் தப்பிவிட்டனர். எல்லாம் முடிந்தபிறகு, நீர்த் தேக்கத்தின் கரையைச்சுற்றி ஐந்துபிணங்கள் சிதறிக் கிடந்தன. 'நான் சார்ஜண்டைப் பார்க்கவே முடியவில்லை; யாரோ வழிப்போக்கனைப்போல் நடித்தேன். காவ லாளிகளோடு பேசினேன். சார்ஜண்டின் பெயர் வூ என்று நான் அறிந்தேன். அவர் லாவோவூவாக இருக்கும் பட்சத்தில் அவருடன் நான் பேசி ஏற்பாடு செய்யமுடியும்.' ஃபான் மேஜைமீது விரல்களால் தட்டினன். 'நாம் என்ன செய்யலாம்?” 'திட்டமிட்டபடி நாம் புறப்படுவோம். நாளைக் குள் அவர்கள் அமைதியடைந்துவிடுவார்கள். எல் லோரும் சரியான அடையாளச்சீட்டுக்களை வைத்துக் கொண்டிருங்கள். முக்கியமாக, அந்த ஆள் லாவோ ஆவாக இருந்தால் அவனை நான் காசுகொடுத்து சரிக் கட்டிவிட முடியுமென்று கருதுகிறேன். நீங்கள் அனைவரும் நிராயுதபாணிகளாக இருக்கவேண்டு. மென்று மட்டும் நான் விரும்புகிறேன்.” 'நான் அவ்விடத்தில் இருக்கமாட்டேனே!" என்ருன் ஜேம்ஸ் முகத்தில் வரண்ட புன்னகையுடன். "அது உண்மைதான்.” - சைசாமின் ஆலோசனைப்பிரகாரம் சூரியாஸ்த மனத்துக்கு முன்னல் சாங்ஃபூவோடும் அசாயோடும் ஜேம்ஸ் புறப்பட்டான்; காட்டினூடே நீண்டபாதை 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/373&oldid=1275045" இலிருந்து மீள்விக்கப்பட்டது