உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

874 யில் பயணம் செய்வதைப்பற்றி அவன் சட்டைசெய்ய வில்லை. மற்றவர்கள் மறுதினம் புறப்படுவார்கள். வீடு கதகதப்பாக இருந்ததால், அவர்கள் கீழ்த் தளத்தில் இருந்த பெரிய அறையில் தங்கியிருந் தார்கள். வயோதிகளுன டுவான் சாப்பாட்டுக்குக் கீழே வந்தான். ஆனல் மற்றவர்கள் சாப்பிட்டு முடிந்த போது, அவன் ஒய்வு எடுத்துக்கொண் டிருந்தான். அக்கம் பக்கமுள்ளவர்கள் யாரிடமாவது பேசலாமென்று சைசாம் வெளியே போய்விட்டான். புதிய விருந்தினர்கள் யாரும் வருவார்கள் என்று தோன்றவில்லை. சீட்டாட விருப்பமுண்டா?” என்று விடுதி உரிமையாளர் கேட்டார். சீட்டு ஆடுவோமா, அல்லது எண்களை ஜோடி சேர்க்கும் ஆட்டம் ஆடுவோமா?” என்று லெய்வா வைக் கேட்டான் ஃபான். 'எண்களை ஜோடி சேர்க்கும் ஆட்டம்தான் எனக்குப் பிடிக்கும்” என்ருள் லெய்வா. அது ஒரு பண்டைய சீன விளையாட்டு. டோமினேஸ் என்று பெயர், கறுப்புத் துண்டுக்களில் பொறிக்கப்பட்ட எண்களை ஜோடிசேர்த்து விளை யாடப்படும் ஆட்டம் அது. 'ஆஹா அவைகளும் என்னிடம் இருக்கின் றனவே!” என்ருன் சத்திரப் பொறுப்பாளன்; 'சில சமயம் இராணுவ வீரர்கள் இங்கு வரும்போது பொழுதைக் கழிக்கவேண்டி இதை விளையாடு வார்கள்.” "டோமினேஸ் அத்துடன் கொஞ்சம் தானியப் பீரும் கொஞ்சம் கொண்டு வாருங்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/374&oldid=752959" இலிருந்து மீள்விக்கப்பட்டது