உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38


ளிடையே இருக்கும் ஆசை, நம்பிக்கை, ஏமாற்றம், நிராசை மு த லி ய புரியாத-புரிந்துகொள்ள முடியாத சக்திகளைப்பற்றியும் அவன் பேசினன். சில வேளைகளில் ஈஸாவின் விழிகள் தளும்பின. அவன் சொன்னதை அவள் கிரகித்துக்கொண்டாள்! வகுப்பறைக்கு வெளியே ஈஸ சந்தோஷமாக வும் சிரிப்பு மயமாகவும் இருக்கக்கண்டான் அவன். கவர்ச்சி கனிந்த தன்னுடைய தோற்றத்தைப் பற்றிப் பிரக்ஞை இல்லாதவன்போலவும் அவன் தோன்றினன், நீண்ட வட்ட முகம். மற்ற சீனப் பெண்களைப் போன்று அவள் தோல் நிறம் அவ் வளவு அழகாக இல்லை. தன்னை அலங்காரம் செய்து கொள்வதிலும் அவள் அதிக ஈடுபாடு காட்டவில்லை. புருவங்களைப் பிடுங்கிவிடவில்லை. ஆனலும், அவ ளது கண்களும் அழகாக அமைந்த உதடுகளும் அவற் றின் இயல்பான மகிழ்ச்சியால் மலர்ந்து அவனை அடிமைப்படுத்தின. ஆங்கிலேய பெண்களைப்போல அவள் சிறிய உருவத்துடன் காணப்பட்டாள். பூரண மான உருவ அமைப்புடன் கீழை நாட்டுக் கவர்ச்சி யும் அவளிடம் சேர்ந்திருந்தது. இவை அவனைத் திருப்திப்படுத்தின. அழகு மிகுந்த மற்றப் பெண் களிடம் காண முடியாத மன ஒற்றுமையின் ஆழத்தை அவளுடைய கறுப்பு நிறத் தோற்றத்தி, லும், அவளது அழகிய கண்களிலும் கண்டான் அவன். அவள் தூய்மையுடன் ஒளிர்ந்தாள். மக்க ளிடம் அவளுக்கு இயற்கையாக-மனமார்ந்த அன்பு இருந்தது. வாழ்வின் அம்சங்கள் யாவும் அவளை ஆனந்தப்படுத்தின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/38&oldid=1274817" இலிருந்து மீள்விக்கப்பட்டது