உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 | அவளை அப்படியே சுட்டு எரித்து விடுவதைப் போல் பார்த்தான் ஃபான்; மேலே இருந்து சிரிப்பு ஒலி கூரைப் பலகைகளின் வழியாகக் கீழே கேட்டது. . தன்னை அடக்கிக்கொள்ள முடியாமல் மெய்ம் மறந்து தன் வாய்க்கு நேராக தன்னுடைய கை முஷ்டியால் குத்திக்கொண்டான் டுவான். லெய்வா மாடிக்குப் போனது முதல் அவர்களில் ஒருவரும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அரைமணி நேரம் கழிந்தது. பிறகு சார்ஜண்ட் தன் முழு உடுப்போடு, மெதுவாக மெள்ளக் காலடி வைத்து தனியாகக் கீழே இறங்கிவந்தான். பிறகு அவன் சத்திர நிர்வாகியை நோக்கித் தலையை அசைத்தபடி தலை நிமிர்ந்து, முக வாய்க்கட்டை வெளியே தெரியும்படி கதவை நோக்கி நடந்தான். சைசாம் அவனுக்காகக் கதவைத் திறந்து கொண்டிருந்தான். அதிகாரி ஒரு பக்கமாகத் தலையை அசைத்தான். சைசாம் அவனைப் பின்தொடர்ந்து வெளியே சென்ருன். "இதோ என்னுடைய கார்டு இருக்கிறது. நாளைக்குக் காவல் நிலையத்தில் இதைக் கொடுக்கும் படி அவர்களிடம் சொல்லுங்கள்; நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல அவர்களுக்குப் பாதுகாப்பாக நான் இரண்டு படைவீரர்களை அனுப்பிவைக்கிறேன்." சிகரெட் பற்றவைக்க அவன் நின்ருன்; சில தப்படிகள் நடந்தான்; பிறகு சற்றே தள்ளாடி சாலை யில் இறங்கிவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/391&oldid=752978" இலிருந்து மீள்விக்கப்பட்டது