உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390


லெய்வாவின் செய்கை குழுவினரை வியப்பில் ஆழ்த்தியது. ஈஸ் மட்டும் அதில் கவனம் செலுத்த வில்லை. கைகளில் தலையை ஏந்தியவாறு தோள்கள் குலுங்க அவள் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே யிருந்தாள். ஐந்து நிமிஷங்கள் கழிந்தன. அமைதி பயங்கர மாக இருந்தது; லெய்வா. இன்னமும் திரும்பவில்லை, அவர்கள் ஒவ்வொருவரும் மாடி முகட்டை மாறி மாறிப்பார்த்த வண்ணம், எதையோ எதிர்நோக்கிய வாறு அமைதியுடன் மெளனமாக அமர்ந்திருந் தார்கள். - தன் உடம்பை முன் வளைத்து பிரம்பு நாற்காலி யில் திணித்துக்கொண்டு குந்துவதற்காக ஃபான் அப்பால் விலகிச் சென்ருன். அவனது கண்கள் வெடித்துவிடுவது போல் கடுங்கோபத்தினுல் பள பளத்துக் கொண்டிருந்தன. அவனுடைய தாடை எலும்புகளின் தசைகள் திடீர் திடீரென்று இழுத்துக் கொண்டன. பத்துப் பதினைந்து நிமிஷங்கள் கழிந்தன, ஈஸ்அமைதியடைந்தாள் என்ன நடந்துகொண்டிருந்த தென்பதைச் சிறுகச் சிறுக புரிந்துகொள்ள ஆரம் பித்தாள். 'அவள் கீழே இறங்கி வராததிலிருந்து, எல்லாம் நல்லபடியாகவே இருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறேன்!” என்று சத்திர நிர்வாகியின் மனைவி யிடம் எல்லோரும் கேட்கும்படியாகச் சொன்னுள் 6NÜG)/fT –,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/390&oldid=1275054" இலிருந்து மீள்விக்கப்பட்டது